மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா செய்யலாம் வாங்க…

சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு சைடிஸாக காலிஃப்ளவர் சுக்கா வீட்டுலே செய்யலாமா… மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் வைத்து சுக்கா செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் – 1

தக்காளி – 3

வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

கரம்மசாலா தூள் – அரை தேக்கரண்டி

கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

பெருஞ்சீரகம் – 1 தேக்க்கரண்டி

கறிவேப்பிலை – கைப்பிடி

செய்முறை

காலிஃப்ளவரை முதலில் கணமாக்கு தேவதையான அளவில் நறுக்கி கொண்டுஅதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் போடவும். அதன் பின் தனியான ஒரு பாத்திரத்தில் நிறை வடிகட்டி வைக்கவும் .

கொத்தமல்லி, புதினா ,வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை வேக வைத்து தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

பின்பு அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

எண்ணெய்யிடன் வதக்கி மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

மசாலா நன்றாக காலிஃப்ளவரில் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா தூவி இறக்கி கொள்ளவும். காரம் அதிகமாக தேவை என்றால் மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.