பாலு மஹேந்திரா கடைசியாக வாங்கிய சத்தியம்.. மனம் திறந்த நடிகை மௌனிகா

சினிமா உலகில் இயற்கையின் அழகையும் ஒளியையும் வித்தியாசமான கண்ணோட்டங்களில் பதிவு செய்து அதை காட்சிகளுடன் உணர்வுபூர்வமாக கடத்துவதில் பிதாமகனாக திகழ்ந்தவர் இயக்குனர் பாலு மஹிந்திரா. இவரிடம் சினிமா பாடம் படித்தவர்கள் எத்தனையோ பேர். இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பாலா, வெற்றிமாறன் போன்றோர் பாலுமஹேந்திராவின் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட வைரங்கள். கமலஹாசன் முதல் தனுஷ் வரை அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த படைப்பாளி. அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, வண்ண வண்ண பூக்கள் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் சாதனை படைத்தவர்.

ஆரம்பத்தில் அகிலேஸ்வரி என்பவரை மணம் முடித்து வாழ்ந்தவர், பின்னர் நடிகை ஷோபா மீது அதீத காதல் கொண்டு அவரை மணம் முடித்தார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது மண வாழ்க்கை ஷோபா தற்கொலையால் முடிவுக்கு வந்தது. அதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான பாலு மகேந்திரா பின்னர் திரைத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படம்.. டைட்டில் கார்டில் இடம்பெற்ற ஒரு முக்கியமான பெயர்!

இந்நிலையில் நடிகை மௌனிகா மீது மீண்டும் காதல் வயப்பட்டு 1998ல் அவரை மூன்றாவதாக மணம் முடித்தார். நடிகை மௌனிகா பாலு மஹேந்திராவின் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அவரது படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். முதலில் திருமணம் செய்யாமலேயே LIVING TOGETHER -ல் வாழ்ந்தவர்கள் பின்னர் திருமணம் முடித்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசமும் அதிகம்.

இயக்குனர் பாலு மஹேந்திரா தான் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது மௌனிகாவிடம் 2 சத்தியங்களை வாங்கியுள்ளார். அதில் அது என்னவெனில் நடிகை மௌனிகா திறமையான நடிகை என்பதால், பாலு மஹேந்திரா தான் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வலுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மற்றொன்று அவருக்குப் பிறகு கண்டிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான்.

இந்த 2 சத்தியங்களில் முதல் சத்தியத்தை நிறைவேற்றி வருகிறார் மௌனிகா. ஆனால் இரண்டாவதாக பாலு மஹேந்திரா கேட்ட சத்தியத்தை மௌனிகா அவருக்கு அளிக்கவில்லை. அவர் நினைவுகளுடனே வாழ்ந்து வருகிறார். இதனை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மௌனிகா

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.