உலகநாயகன் கமல் வீட்டில் நடந்த திடீர் துயர சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்

உலக நாயகன் கமல்ஹாசனின் தாய்மாமாவான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தனார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனை சிறுவயதில் இருந்தே வளர்த்து அவரது வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தவர் அவரது தாயின் சகோதரரான சீனிவாசன்.

கமல்மேல் சீனிவாசனுக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. அதேபோல் கமல்ஹாசனும் தனது தாய்மாமாவின் மேல் அளவுகடந்த பாசமும், மரியாதையும் கொண்டிருந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் கொடைக்கானலில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் மறைவு : ரஜினி, கமலை இயக்கியது முதல் தேசிய விருது வரை குவித்த இந்த ஹிட் படமெல்லாம் இவர் எடுத்ததா?

இவரின் உடலானது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. மேலும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயதிநி ஸ்டாலின் இரங்கல் செய்தியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்-கலைஞானி கமல்ஹாசன் சாரின் தாய்மாமா திரு. சீனிமாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றோம்.

திரையுலகம், அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாகத் திகழ்ந்த பெரியவர் திரு. சீனிவாசன் அவர்கள் மறைவு அவர்களுடைய குடும்பத்திற்குப் பேரிழப்பு, அவரை இழந்து வாடும் கமல் சார் மற்றும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியினரும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவால் கமல்ஹாசன் குடும்பம் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...