எந்த அரங்கமானாலும் கோபத்தை வெளிப்படுத்தும் துணிச்சல்காரர்… கேப்டனுக்குப் புகழாரம் சூட்டிய கமல்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கமல்,  விஜயகாந்த் பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதைப் பற்றிப் பார்ப்போம்.

விஜயராஜ் எப்படி இருந்தாரோ அதே போல தான் விஜயகாந்தும் எனக்கு இருந்தார். அவர் பெரிய நடிகரானபோதும் எளிமையாக இருந்தார். அவர் பல விமர்சனங்களையும் அவமானங்களையும் தாங்கி மேலோங்கி வந்தவர்.

அதற்காக அவர் எந்த காழ்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். நாம கடந்து வந்துட்டோம்.

அவங்க கடந்து வரட்டும் என்று இல்லாமல் அவங்களுக்காகவும் போராடும் குரல் அவருக்கு உண்டு. அவர் நட்சத்திரமானார் என்பது அவர் உழைப்பில் வந்தது என்றாலும், ஆரம்பம் மற்றும் கடைநிலை நடிகர்களுக்கு எல்லாம் அவர் ஒரு பொருளாக இருந்தது அவர்கள் செய்த பாக்கியம்.

Vkanth
Vkanth

அவர் கொடுப்பது பலருக்கும் தெரியாது. 1998 பிறந்தநாள் அன்று அவர் செய்த உதவி அளப்பரியது. அப்போது தினமணியில் எஞ்சினீயரிங் சீட் கிடைத்தும் படிக்க வசதி இல்லாத 3 மாணவர்களைப் பற்றிய செய்தி வந்தது.

உடனே அவர்கள் முகவரியைத் தேடிப் பிடித்து அவர்களுக்குப் போய் விடுதிக்கட்டணம், படிப்புக்கான செலவு என அனைத்தையும் கொடுத்து அவர்களது படிப்புக்கு உதவி செய்தார் அவர். 70, 80களில் சமூக அரசியல் கோபங்களை எல்லாம் பிரதிபலிக்கும் சினிமா உருவமாக அவர் இருந்தார்.

எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று அவரது நியாயமான குணமும் ஒன்று. இன்னிக்கும் கிராமத்து ஆள் மாதிரி நாக்கைக் கடிச்சிக்கிட்டு அவர் எந்த அரங்கமாக இருந்தாலும் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார். அந்தத் துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்துக்கே உதவியாக இருந்தது.

அவர் நடித்த தூரத்து இடி முழக்கம் படம் விருதுக்கும் கூட போயிருக்கு. அன்று முதல் அவர் கமர்ஷியல் ஹீரோவாகவும் படிப்படியாக உயர்ந்தார். அது அவரோட திறமை, உழைப்பு, அவருக்கு வந்த வாய்ப்புகள். உடன் நடிக்கும் நடிகர்களிடம் கூட இதை எப்படி செய்யலாம் என்று கேட்கும் எளிமை அவரிடம் உண்டு.

அவருடன் நான் ஒரு படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடித்தேன். அங்கு அவர் எனக்குக் காட்டிய அன்பும், மரியாதையும் இன்றும் ரீங்கரிக்கிறது. தனக்குப் பிடிக்காதவங்களைக் கூட கூப்பிட்டுப் பேசிடுவாரு.

அந்தத் தைரியம் அவரிடம் உண்டு. அந்த மாதிரியான குணாதிசயங்களை நாம் பிரதிபலிக்கலாம். காப்பி அடிக்கலாம். தப்பில்ல. அவர் போல் இல்லை என்று சொல்வது வழக்கம். அவர் போல் இருக்க வேண்டும் என்று முயற்சியாவது செய்வோம்.

இவ்வாறு உலகநாயகன் கமல் பேசினார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...