குணா படத்தில் நடிக்க வைக்க கமல் வலைவிரித்த ஹீரோயின்கள் லிஸ்ட்…! அடேங்கப்பா…. இவ்ளோ இருக்கா?

உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் குணா. தமிழ்ப்பட உலகில் இது தவிர்க்க முடியாத படம். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ரசிக்காமல் யாரும் சென்று விட முடியாது. படம் முழுக்க முழுக்க கமலுக்குள் ஒளிந்துள்ள நடிப்பு அரக்கன் வெளிப்படுவார். இந்தப் படத்தில் ரேகா, ஜனகராஜ் உள்பட பலரும் நடித்துள்ளனர். கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரோஷினி.

இவர் புதுமுகம் தான் என்றாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ இதன்பிறகு இவர் எந்தப் படமும் நடிக்கவில்லை. அது ஏன் என்று இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. அது இருக்கட்டும். இந்தக் கதாபாத்திற்காக கமல் யார் யாரை எல்லாம் அணுகினார் என்று தெரியுமா?

Guna 2
Guna 2

முதலில் இவர் நடிகை ஸ்ரீதேவியிடம் கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று சொல்லி விட்டார். ஏன்னா அவர் கால்ஷீட் ஃபுல்லாக இருந்தது. அதன்பிறகு நடிகை குஷ்பூவிடம் கேட்ட போது அந்தக் கதாபாத்திரம் தனக்குப் பிடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதன்பிறகு நடிகை சிவரஞ்சனி ஓகே சொல்லிவிட்டார். படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. அதன்பிறகு சில காரணங்களால் அவரும் விலகினார்.

அதன்பிறகு கமல் மனைவி சரிகா ரோஷ்னியைக் கண்டுபிடித்தார். இவர் அமெரிக்காவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் இன்ஸ்டிட்யூட்டுக்குச் சென்று நடிப்பு கற்பதற்காகச் சென்றார். அப்போது தான் சரிகா இவரைக் கண்டுபிடித்தார். கமல் அவளைப் பார்த்த உடனேயே ஓகே செய்தார்.

அவருக்கு 5 கால்ஷீட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் ஒன்று மகளிர் மட்டும். இருந்தாலும் ரோஷினி அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு இங்கு நடிப்பதற்கு சிரமமாக இருந்தது. உணவு மற்றும் பிற சூழ்நிலைகள் அவருக்கு அசௌகரியத்தைத் தந்தன. அதேநேரம் கமல் தன் மீது அதிகமாகக் கவனம் செலுத்துவதையும் கண்டு கொண்டார்.

அவருக்கான படப்பிடிப்பு முடிந்ததும் அமெரிக்காவுக்குப் பறந்தார். இனி தென்னிந்தியப் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

Guna 3
Guna 3

குணா ஒரு சோகமயமான காதல் கதை. படப்பிடிப்பு துவங்கியதும், தோல்வி ஆகும் என்று பலர் சொன்னார்கள். அது படக்குழுவினருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் படம் ஆவரேஜ் ஹிட் ஆனது. இது ஒரு மாபெரும் கலைப்படைப்பு. கமலின் திரை உலகப் பயணத்தில் ஒரு மைல் கல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...