சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த கமல்! காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது கமல்ஹாசன் என்று வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, அதில் நடிகர் ரஜினிகாந்த் சுமார் 45 நிமிடம் பேசியுள்ளார். இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினிகாந்த் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் மிகவும் வலிமையானது என்று கூறியதோடு, இந்த படத்தில் வில்லனாக ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் விரும்பியதாக கூறினார். உடனே அவர் தனது நெருங்கிய நண்பரான முன்னணி நடிகரை தொடர்பு கொண்டதாகவும், அவர் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறிய ரஜினிகாந்த், பின்பு நீண்ட யோசனைக்குப் பிறகு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறினார்.

தற்பொழுது அந்த நெருங்கிய நண்பர் யார் என்று கேள்வி பலரிடமும் எழுந்து வந்த நிலையில், அவர் நடிகர் கமல் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் இறுதி காட்சிகளில் ரஜினி அவர்கள் வில்லனை புரட்டி எடுக்கும் மாஸான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் கமல் நடித்தால் பார்க்கும் ரசிகர்களின் மனத்தில் வெறுப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த காரணத்தை மனதில் வைத்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் புகழ் கவினுக்கு திருமணமா? பொண்ணு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..

இதனால் ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களையும் திரையில் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு நழுவி விட்டதாக சினிமா ரசிகர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews