பிக்பாஸ் புகழ் கவினுக்கு திருமணமா? பொண்ணு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் ஹீரோக்களில் ஒருவரான கவின், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் என்ற டீனேஜ் ஸ்கூல் சீரியல் மூலம் முதலில் திரைக்கு அறிமுகமானார். பின்னர் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்த அவர், நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இருப்பினும், பிக் பாஸ் தமிழ் 3 இல் அவர் பங்கேற்ற பிறகு அவரது புகழ் அடுத்த கட்டத்திற்கு சென்றது. இதனை அடுத்து லிஃப்ட் மற்றும் டாடா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதீஸ் இயக்கத்தில் கவின் 04 மற்றும் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கவின் திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடிகர் கவின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுடன் டேட்டிங் செய்வதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இருப்பினும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரவிய அதே பெண்ணை அடுத்த மாதம் கவின் திருமணம் செய்யப் போகிறாரா அல்லது அது நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் போகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை கவின் அல்லது அவரது குடும்பத்தார்களோ இந்தத் திருமணச் செய்தியை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews