அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!

இந்தியத் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் சரத்பாபு அறிமுகமானார். ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Sarathbabu2
Sarathbabu2

முள்ளும் மலரும் படத்தில் அவர் நடித்த செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடலை இப்போது பார்த்தாலும் சரத்பாபுவின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள், சலங்கை ஒலி படத்தில் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ்ப்படங்களில் அழகான முகத்தைக் கொண்டு அம்சமான நடிப்பை வெளிப்படுத்தித் தாய்க்குலங்களைக் கவர்ந்தார். இவரது நடிப்பை முத்து என்ற ஒரு படத்தில் பார்த்தால் போதும். என்ன ஒரு அபாரமான நடிப்பு!

Muthu Sarathbabu Rajni
Muthu Sarathbabu, Rajni

அவர் ரஜினியின் எஜமானராகக் காட்டும் தோரணையும், மீனாவுடன் காதல்வயப்படுவதும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதே போல அண்ணாமலை படத்தில் ரஜினியின் நண்பனாக வந்து அசத்து அசத்து என்று அசத்தியிருந்தார் சரத்பாபு.

சலங்கை ஒலி படத்தில் கமலின் நண்பராக வந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனையால் கடந்த ஒரு மாத காலமாக அவதிப்பட்டவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமான செய்தி மொத்த திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

ராதாரவி சரத்பாபுவைப் பற்றி இப்படி சொல்கிறார்.

என்னோட நெருங்கிய நண்பர். மனசை புண்பட்டு யார்கிட்டயும் பேச மாட்டார். எல்லாருட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. ரஜினி சாரோட நல்ல நண்பர். அண்ணாமலை படத்துல நாங்க எல்லாம் சேர்ந்து நடிச்சிருப்போம். அந்த கேரக்டரை அவரை மாதிரி யாரும் செய்ய முடியாது. நல்ல ஐயப்ப பக்தர்.

நான் இப்போ கோத்தகிரில ஓய்வு எடுக்க வந்துருக்கேன். அவரோட இறுதி ஊர்வலத்துல என்னால கலந்துக்க முடியல. அதனால ரொம்ப வருந்துறேன். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஒய்.ஜி.மகேந்திரன் சொல்லும்போது,
அவருக்கும் எனக்கும் உள் ள நட்பு பலருக்கும் தெரியாது. ஆனா உச்சக்கட்டம் படத்துல இருந்து நெருங்கிய நட்பானது. என்னை வாடா போடான்னு கூப்பிடுவாரு.

அந்தக் காலகட்டத்துலே நாங்க அமெரிக்கா போயி தெலுங்க படம் எல்லாம் சூட் பண்ணினோம். அழகன். அவனைப் பார்த்து நாங்க எல்லாம் பொறாமைப்படுவோம்.

Sarath babu 3
Sarath babu 3

மகதீரா படத்துல ராஜமௌலி கூடவும் நடிச்சிருக்காரு. ஐதராபாத் மருத்துமனைல அவரு சிகிச்சைக்காக சேர்த்து இருந்தாங்க. அவரோட அழகான முகத்தைப் படைச்ச ஆண்டவன் அவருக்குப் போயி ஏன் ஆஸ்பிட்டல்ல இத்தனை கஷ்டத்தையும் கொடுத்தாருன்னு நினைக்கும்போது ரொம்ப மனசு வலிக்குது. அவரது ஆத்மா சாந்தி அடைய எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...