நாயகன் மீண்டும் வரான்… கமல் ஹாசன் 234 படத்தின் அப்டேட்!

ஹாலிவுட் ‘காட் ஃபாதர்’ படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்ட படம் ‘நாயகன்’. 1987ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

நிழல் உலக தாதா பற்றிய படமான நாயகனில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, நாசர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சரண்யாவுக்கு இதுவே முதல் தமிழ்படம். மணிரத்தினத்தின் பிரதான கேமாரா மேன் பி.சி ஸ்ரீராம், கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் ‘நாயகன்’ இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படம் வெளியாகி 35 வருடங்களாகி விட்ட நிலையில், கமல் ஹாசன் தன்னுடய 234வது படத்திற்கு மணிரத்தினத்துடன் மீண்டும் இணைந்திருப்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ‘KH 234’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. ‘KH 234’ படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், கேமரா ரவி கே.சந்திரன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், விக்ரம் மற்றும் லியோவில் மாஸ் சண்டை காட்சிகளை அமைத்த அன்பறிவு ‘KH 234’ல் இணைந்துள்ளனர்.

விக்ரம்(2022) படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் எந்த படமும் இந்த ஆண்டில் வெளியாகவில்லை. பல பிரச்சனைகளுக்கு பின் நீண்ட நாட்களாக படபிடிப்பில் இருக்கும் ‘இந்தியன் 2’ அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் ‘KH 233’ ‘படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்நிலையில் ‘KH 233’ மற்றும் ‘KH 234’ இந்த இரு படங்களில் எது முதலில் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து ‘விக்ரம் 2’ படத்திற்காக மீண்டும் கமல்ஹாசன் லோகேஷூடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் படங்கள் தொடர்ந்து தயாராகிக் கொண்டே வரும் நிலையில், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படம் ஒன்றையும் தயாரித்து வருகின்றது. ‘KH 234’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை நவம்பர் 7ம் தேதி உலக நாயகனின் பிறந்த நாள் அன்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews