படிக்காத மேதை டூ பேர் சொல்லும் பிள்ளை… வெற்றி பெறாத கமல் நடித்த ரீமேக் படம்…!!

சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான படிக்காத மேதையை ரீமிக்ஸ் செய்த கமல்ஹாசன், அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று வருத்தமடைந்தார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படிக்காத மேதை. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலை வாரி குவித்தது.

இந்த நிலையில் தான் 1987 ஆம் ஆண்டு படிக்காத மேதை படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் எஸ் பி முத்துராமன் முடிவு செய்தார். ஆனால் சிவாஜி கேரக்டரை மட்டும் எடுத்து கொண்டு வேறொரு கதையை அவர் உருவாக்கினார். படிக்காத மேதை படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் தான் இந்த படத்திற்கும் வசனம் எழுதினார் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

per sollum pillai

தியாகராஜனை ஹீரோவாக்கிய படம்.. கமல், ரஜினி உச்சத்தில் இருந்தபோதே வெற்றி பெற்ற படம்..!

இந்த படத்தில் கேஆர் விஜயா மற்றும் ஜெய் கணேஷ் தொழிலதிபர்களாக இருப்பார்கள். இவர்கள் சுற்றுலா செல்லும்போது அவர்கள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்கும். ஒரு அனாதை சிறுவன் அதை கண்டுபிடித்து அதை சாப்பிட வேண்டாம் என்று கூறுவான். ஆனால் அவர்கள் நம்ப மாட்டார்கள். அதனால் அந்த உணவை அந்த சிறுவனே சாப்பிட்டு மயங்கி விழுந்து விடுவான். உடனடியாக மருத்துவமனை சென்று இருவரும் அந்த சிறுவனை காப்பாற்றுவார்கள்.

அதனை அடுத்து அந்த சிறுவனை அவ்விருவரும்  வளர்ப்பார்கள். அந்த சிறுவன் வளர்ந்து தொழிலதிபர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தான்? குடும்பத்தின் வளர்ச்சிக்காக எப்படி பாடுபட்டு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தான்? அந்த தொழிலதிபரின் எதிரிகளின் சதிகளை எப்படி முறியடித்தான் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

per sollum pillai2

இந்த படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் மட்டும் வெள்ளந்தியான, அப்பாவியான படிக்காத மேதை சிவாஜி கணேசன் கேரக்டரை ஒட்டி இருக்கும். இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ராதிகா நடித்திருப்பார். கமலஹாசன் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு செட்டிநாடு பாஷை பேசி நடித்திருப்பார்கள். இந்த படத்தில் மனோரமா, ரம்யா கிருஷ்ணன், மலேசியா வாசுதேவன், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

இந்த படத்தில் ’அம்மம்மா வந்ததிந்த சிங்கக்குட்டி என்ற பாடல் காட்சிகள் கமல் வேலை பார்த்துக் கொண்டே தத்ரூபமாக நடனமாடும் காட்சியை நடன இயக்குனர் புலியூர் சரோஜா இயக்கியிருப்பார். இந்த பாடல் இன்று பார்த்தாலும் கமல்ஹாசனின் நடன ஆர்வத்தை பாராட்டும் வகையில் இருக்கும். கமலஹாசன் மற்றும் புலியூர் சரோஜா ஆகிய இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் இந்த பாடல் காட்சி மிக அபாரமாக வந்திருக்கும்.

இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை. இந்த பாடலில் கமல்ஹாசனுடன் ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடி இருப்பார். இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது இயக்குநருக்கு திடீரென ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இந்த பாடல் காட்சி ஆரம்பம் முதல் இறுதி வரை பட்டாசுகள் வெடிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கும்.

per sollum pillai1

ஆனால் பாதி பாடல் காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு தீர்ந்து விட்டது என்று உதவியாளர்கள் சொல்வார்கள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம் இரவு 12 மணி என்பதால் அந்த நேரத்தில் எங்கே போய் பட்டாசு தேடுவது என்ற சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னையின் நாலா பக்கங்களிலும் தனது உதவியாளர்களை அனுப்பிய எஸ் பி முத்துராமன் எப்படியாவது பட்டாசு வாங்கி வாருங்கள் என்று கூறியிருந்தார்.

ரஜினிக்கு பதிலாக களமிறங்கிய கமல்! தரமான சம்பவத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

அதன் பிறகு வடபழனியில் உள்ள ஒரு பட்டாசு கடையை பார்த்து அந்த கடையின் ஓனருக்கே போன் செய்து கடைக்கு வரவழைத்து பட்டாசு கடை வாங்கி வந்த பின்னர் தான் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியானது ஆனால் இந்த  படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews