ரஜினிக்கு பதிலாக களமிறங்கிய கமல்! தரமான சம்பவத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்பொழுது கமல் நடிக்க உள்ளார் என்று தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்த்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாக்கி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன்முதலில் ரஜினிகாந்த்தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். முதலில் இயக்குனரும் ரஜினியை தான் சாய்ஸ் ஆக வைத்திருந்தார்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஹீரோவாக உள்ளதால் அவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இயக்குனரிடம் நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

இதற்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்க வந்துள்ளார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி! ஒரே வாழ்த்து மழை தான்!

இதற்கு முன்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ரஜினிக்கு பதில் இந்தியன் படத்தில் கமல் நடித்து ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோல ரஜினி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் கமல் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...