நொந்து போய் இருந்த பாலு மகேந்திராவுக்கு கமல் கொடுத்த வாழ்க்கை!..அது என்ன கதைன்னு தெரியுமா..?

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் திரைப்பட ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். பின்னர் படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டு 1977 ஆம் ஆண்டு கோகிலா என்ற படத்தின் மூலம் கன்னட மொழியில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பின்னர் 1977ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளராக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் பாலு மகேந்திரா.

அன்றைய காலத்தில் இருந்த சினிமா முறையை மாற்றி யதார்த்த வாழ்வியலோடு திரைப்படங்களை உருவாக்கியவர் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளர் இயக்குனர் என்பதை தாண்டி பல படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார். ஒரு சில படங்களை தயாரித்து இருக்கிறார். இப்படி சினிமாவில் அவர் பயணிக்காத துறைகளே கிடையாது. அப்படி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் பாலு மகேந்திரா.

இவர் உருவாக்கியது நல்ல படங்களை மட்டும் அல்ல தமிழ் சினிமாவில் இன்று கொடி கட்டி பறக்கும் ஒரு சில இயக்குனர்கள் இவரின் பட்டறையில் இருந்து வெளிவந்தவர்கள் தான். உதாரணமாக சேது பிதாமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா,வெற்றிமாறன்,ராம் போன்றவர்கள் அடங்குவர். என்னதான் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்கினாலும் யானைக்கும் அடி சரக்கும் என்பது போல் அவர் வளர்ந்து வரும் காலங்களில் தொடர் தோல்வி படங்களால் பெரும் நஷ்டம் அடைந்து வறுமைக்கு ஆளானார்.

அதனால் தன்னுடைய நெருங்கிய நண்பரான கமல்ஹாசனிடம் கடன் வாங்க சென்று இருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பல மணி நேரங்கள் உலக சினிமாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி பணம் கேட்பது என்று தயக்கத்துடன் இருந்தார் பானு மகேந்திரா. கொஞ்ச நேரத்தில் ஒரு கதையை சொல்லி இந்த கதையை உங்களுக்கு பிடித்திருக்கிறதா..? அப்படி பிடித்திருந்தால் இதை ஏற்றி தர முடியுமா..? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் முடியும் என்று சொன்னதும் கமல்ஹாசன் உற்சாகத்தில் முன்பணமாக பாலு மகேந்திரா எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகையை வழங்கியுள்ளார். அப்படம் தான் பின்நாளில் கமலுடன் கோவை சரளா,ரமேஷ் அரவிந்த்,கல்பனா போன்றவர்கள் நடித்து வெளிவந்த ”சதிலீலாவதி” திரைப்படம் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். மேலும் ஒளிப்பதிவு இயக்கம் என பாலுமஹிந்திரா கை வண்ணத்தில் கமலின் மாறுப்பட்ட நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews