தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கை மீறிய கமல்-ரஜினி.. அதன்பின் செய்த மிகப்பெரிய உதவி..!

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு கமல், ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு வாக்குறுதியை கொடுத்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியாததை அடுத்து அதற்கு பதிலாக வேறு ஒரு மிகப்பெரிய உதவி செய்தனர், அது என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் வசனகர்த்தா பஞ்சு  அருணாச்சலம். அவர் கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ஒரு சில படங்களை தயாரித்து உள்ளார் .

ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் இருவரையும் வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க வேண்டும் என்றும் அந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்க வேண்டும் என்றும் பஞ்சு அருணாச்சலம் திட்டமிட்டார்.

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

panchu arunachalam

கமல், ரஜினி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த பஞ்சு அருணாச்சலம் இந்த ஐடியாவை கூற, கண்டிப்பாக நாங்கள் இருவரும் உங்களுக்கு ஒரு படம் பண்ணி தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அதன் பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனித்தனியாக மற்றும் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

ரஜினிக்கு காயத்ரி, பைரவி, பிரியா போன்ற படங்களும் கமலுக்கு குரு உள்பட சில படங்களும், இருவரும் இணைந்து நடித்த அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தின் திரைக்கதையை தயார் செய்துவிட்ட பஞ்சு  அருணாசலம், கமல், ரஜினியிடம் கால்ஷீட் கேட்கும் போது இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் அதனால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பல மாதங்கள் கஷ்டப்பட்டு திரைக்கதை தயார் செய்த நிலையில் இப்போது இருவரும் இப்படி சொல்லிவிட்டார்களே என்று மிகவும் அதிர்ச்சி அடைந்தார். நாங்கள் இணைந்து தான் உங்கள் படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொன்னோமே தவிர உங்கள் படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை, எனவே உங்களுக்கு தனித்தனியாக ஆளுக்கு ஒரு படம் நடித்து தருகிறோம் என்று கூறினர்.

kalyana raman

ஒரு வருடத்தில் 15 படங்கள்….. ரஜினி கமலுக்கு இணையாக கொடிகட்டி பறந்த மைக் மோகன்… வேதனையடைந்த சம்பவம்….!!

இருவரையும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்கு தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசனுக்காக தனியாக ஒரு படத்தின் கதையையும் ரஜினிக்காக ஒரு கதையையும் பஞ்சு  அருணாச்சலம் தயார் செய்தார். எஸ்.பி முத்துராமனை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் இந்த இரண்டு படங்களையும் நீங்களே எனக்கு இயக்கி தரவேண்டும் என்று கூறினார்.

ஆனால் எஸ்பி முத்துராமன் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு படங்களையும் இயக்க முடியும், ஒரு படத்தை நான் இயக்குகிறேன், இன்னொரு படத்தை என்னுடைய உதவியாளர் ஜிஎன் ரங்கராஜன் இயக்கட்டும் என்று கூறினார். அவ்வாறு உருவான திரைப்படம் தான் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை.

எஸ் பி முத்துராமன் உதவியாளர் ஜிஎன் ரங்கராஜன் இயக்கத்தில் உருவானது கல்யாணராமன். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில் ஸ்ரீதேவி, விகே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அதேபோல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பஞ்சு அருணாச்சலம் தயாரித்த படம் தான் ஆறிலிருந்து அறுபது வரை. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜெயலட்சுமி, சோ, சங்கீதா, ஜெயா உள்பட பலர் நடித்தனர். இந்த இரண்டு படங்களுக்கும் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.  இரண்டு படங்களிலும் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.  .

aarilirundhu aruvathu varai

கல்யாணராமன் மற்றும் ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய இரண்டு திரைப்படங்களும் இரண்டே மாத இடைவேளையில் வெளியானது. 1979 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி கல்யாணராமன் திரைப்படமும், 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படமும் வெளியானது. இரண்டு படமும் வெளியாகி சக்கை போடு போட்டது. வசூலில் சாதனை செய்தது.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல் நடித்த கல்யாணராமன் திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மதிக்கப்பட்ட ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் ஆகிய இரண்டுமே வெற்றி பெற்றது. கல்யாணராமன் அளவுக்கு ஆறிலிருந்து அறுபது வரை வசூல் செய்யவில்லை என்றாலும் அந்த படத்தாலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தான்.

கடன் வழங்கி உதவிய கமல்… படம் இயக்கி கொடுத்த பாலு மகேந்திரா… அதுதான் சூப்பர்ஹிட் சதிலீலாவதி..!!

கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து நடித்து தருகிறோம் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டாலும் இருவரும் தனித்தனியே ஒரு படம் ஒரே நேரத்தில் நடித்துக் கொடுத்து பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு உதவி செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...