தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்த கலைஞரின் பேரன்கள் நடித்த படங்கள் – ஒரு பார்வை

தமிழ்த்திரை உலகில் கலைஞர் குடும்பத்தின் பணி அளப்பரியது. 75 படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார்.

Kalaignar 2
Kalaignar 2

அவற்றில் ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, நாம், மனோகரா, மருதநாட்டு இளவரசி, நெஞ்சுக்கு நீதி, பாசப்பறவைகள், உளியின் ஓசை, பொன்னர் சங்கர் ஆகிய படங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை.

அவரது குடும்ப வாரிசுகளான மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் திரை உலகில் கோலோச்சி வருகின்றனர். இவர்களது படங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

அருள்நிதி

Demondy colony
Demondy colony

2010ல் வெளியான வம்சம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். வம்சம் படத்திற்குப் பிறகு இவரது நடிப்பில் மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, பிருந்தாவனம், டி பிளாக், தேஜாவு என 15 படங்கள் வெளிவந்தன.

படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. கதை தனக்குப் பிடித்திருக்க வேண்டும். அப்போது தான் இவர் நடிப்பார். இவர் பல படங்கள் நடித்த போதும், சிறந்த கதைகளைத் தேர்வு செய்த போதும், இன்னும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்காமல் இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

Psycho 1
Psycho 1

உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத்திறன்களைப் பெற்றவர்.

விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்திற்கு இவர் தான் தயாரிப்பாளர். சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு விநியோகஸ்தர் இவர் தான்.

2009ல் வெளியான சூர்யா நடித்த ஆதவன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் உதயநிதி ஸ்டாலின் வந்து அசத்துவார். 2012ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ்சினிமாவின் கதாநாயகன் ஆக்கியது. சந்தானத்தின் காமெடி படத்திற்குப் பக்கப்பலமாக இருந்தது.

தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி என பல படங்களில் நடித்துள்ளார் உதயநிதி.

இவற்றில் மனிதன், சைக்கோ, நெஞ்சுக்கு நீதி படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. தற்போது ரெட் ஜெயண்ட் மூவீஸ் பட நிறுவனத்தின் நிறுவனராகவும், எம்எல்ஏ.வாகவும் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...