கட்ட பஞ்சாயத்து பண்றாங்க.. விஷாலுக்கே இந்த நிலைமைன்னா.. கடைசி நேரத்தில் குமுறிய ’ரத்னம்’ பட ஹீரோ!

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் தனது படத்துக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக புரட்சித் தளபதி விஷால் அதிரடியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

விஷால் படத்துக்கு கட்ட பஞ்சாயத்து:

தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல சங்கங்களில் முக்கிய பொறுப்பை வகித்து வரும் நடிகர் விஷால் படத்துக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்கள் என்ன ஆகும் என்கிற கேள்வியும் விஷால் முன்வைத்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளில் தப்பை தட்டிக் கேட்கும் இளைஞனாக ரத்னம் கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் இந்த படத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் ஹரி பல பேட்டிகளில் கூறி வருகிறார்.

இந்நிலையில் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு எதிராக கடைசி நேரத்தில் சிலர் வேண்டுமென்றே சிக்கல் உருவாக்கி இருப்பதாகவும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தியேட்டர் உரிமையாளர்கள் கடைசியில் நேரத்தில் முடிவெடுத்திருப்பது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது என்றும் இது முழுக்க முழுக்க கட்டப் பஞ்சாயத்து தான் என அதிரடியாக பேசியுள்ளார் நடிகர் விஷால்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அரசியலில் களமிறங்கி போட்டி போட போகிறேன் எனது சமீபத்தில் நடிகர் விஷால் அறிவித்திருந்தார். மேலும், அரண்மனை 4 படத்தை விஷால் படத்துடன் வெளியிட காரணமே விஷால் படத்தை முடக்கத்தான் எனக் கூறினர். ஆனால் அதிலிருந்து சுந்தர் சி தனது அரண்மனை 4 படத்தை மே 3-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டார்.

எந்த ஒரு போட்டியும் இன்றி விஷால் சோலோவாக நாளை ரத்னம் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று அந்த படத்துக்கு சில இடங்களில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக விஷால் வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டபடி நாளை விஷால் நடித்துள்ள ரத்னம் படம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஏரியாவில் வெளியாகுமா? பெரியளவில் இந்த படம் மார்க் ஆண்டனி போல வெற்றி பெறுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...