இளையராஜாவின் வலதுகையாக விளங்கிய இசைக்கலைஞர்.. இந்த சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசைதானா?

தமிழ்த்திரையுலகிற்கு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே பணியாற்றி காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கின்றனர். அப்படி இளையராஜாவின் குழுவில் இருந்து வந்து தனியே இசையமைத்தவர் தான் வி.எஸ். நரசிம்மன். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த வி.எஸ்.நரசிம்மன், இளையராஜாவின் திரையிசை குருவாகிய ஜி.கே.வெங்கடேஷின் இசைக்குழுவில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் அன்னக்கிளி மூலம் இளையராஜா தனியாக இசையமைக்க ஆரம்பித்த போது அவருடன் சேர்ந்து பயணித்தார். இளையராஜாவின் பெரும்பாலான படங்களிலும், அவருடைய இசை ஆல்பங்களிலும், குறிப்பாக சிம்பொனி இசையிலும் வி.எஸ்.நரசிம்மனின் பங்கு அளப்பறியது. இப்படி இளையராஜவுடனே இசையமைத்து வந்தவரை கே. பாலச்சந்தர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.

உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆவாரம் பூவு ஆறேழு நாளா..’ என்ற பாடல் அப்போது வானொலிகளிலும், பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க கவனிக்க வைத்தார். பி.சுசீலா, எஸ்.பி.பி. குரலில் பாடிய இந்தப் பாடல் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான ‘ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்தை..’ என்ற பாடலும் மிகப் பிரபலம் ஆனது. இன்றும் சரிதா என்று சொன்னாலே இந்தப் பாடல்கள் தான் ஞாபகத்திற்கு வரும். இப்படி தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்த வி.எஸ்.நரசிம்மன், தொடர்ந்து 1984 முதல் 1994 வரை பல படங்களுக்கு இசையமைத்தார் நரசிம்மன்.

இவரது இசையில் மேலும் வெளிவந்த கண்சிமிட்டும் நேரம் படத்தில் இடம்பெற்ற ‘விழிகளில் கோடி அபிநயம்..’ என்ற பாடலும், ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் ‘பூ மேடையோ.. பொன் வீணையோ’ என்ற பாடலும் இவரது இசையில் வெளிவந்தவையே. தொடர்ந்து யார், கல்யாண அகதிகள், ஒரு வீடு இருவாசல், பாசமலர்கள், வண்ண வண்ணக் கனவுகள் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார். இப்படி இளையராஜா உச்சத்தில் இருந்த நேரத்தில் அவரது குழுவில் இருந்து வந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார் நரசிம்மன். வி.எஸ்.நரசிம்மன் அடிப்படையில் ஒரு வயலின் இசைக்கலைஞரும் கூட.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...