அஜீத் பாணியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்.

நடிகர் அஜீத் குமார் தனது கொள்கையில் சரியாக இருப்பார். தனது ரசிகர்களை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவரது புகழுக்காக பயன்படுத்தியதே கிடையாது. மேலும் எனது தொழில் நடிப்பு. ரசியுங்கள், கருத்துக்களைக் கூறுங்கள் என்ற அளவோடு தான் அவர் தன் ரசிகர்களைப் பார்க்கிறார்.

ஆனால் ரசிகர்களோ அவரை தங்கள் தலைவனாகக் தூக்கிக் கொண்டாடுகின்றனர். இதனாலேயே அஜீத் பெரும்பாலும் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்க்கிறார். மேலும் அரசியல் நிலைப்பாட்டிலும் உங்களுக்கு யார் பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். நான் யாரையும் இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என நிர்பந்திக்க மாட்டேன் என்று கறாராக பலஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்.

தற்போது இதே பாணியைக் கையில் எடுத்திருக்கிறார் கன்னட நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், புனித் ராஜ்குமாரின் சகோதரருமான சிவராஜ்குமார் கன்னட திரையுலகிலும், கன்னட அரசியலிலும் முக்கிய புள்ளியாகத் திகழும் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழில் கடந்த வருடம் ஜெயிலர், இந்த வருடத் துவக்கத்தில் கேப்டன்மில்லர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதனால் தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் உருவாயினர்.

இந்நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தல் நாடெங்கிலும் நடைபெற்று வரும் சூழலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனது மனைவி கீதாவை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் சிவராஜ்குமார். இதுபற்றி அவர் கூறும் போது, “எனது மனைவி வழியிலும், எனக்கும் காங்கிரசைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். எனவே அவரை காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கியுள்ளோம். மேலும் நான் இதர கட்சியைப் பற்றி குறிப்பிட விரும்பவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது.

‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..’ ‘பூவே உன்னை நேசித்தேன்..’ இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசையா?

எனது ரசிகர்களுக்கும் நான் கூறிக் கொள்வதும் இதான். இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று அவர்களை நிர்பந்திக்க மாட்டேன். அது அவர்களது விருப்பம், சுதந்திரம். சினிமா வேறு, அரசியல் வேறு. அதேபோல் என்னுடைய விருப்பத்திலும் தயவு செய்து தலையிடாதீர்கள். உங்கள் ஆசைகள் வேறு, எனது ஆசைகள் வேறு. ஆனால் சினிமா என்று வரும்பொழுது உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதே எனது பணி” என்று செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் சிவராஜ்குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...