ரீல் வாழ்க்கையில் காமெடி ஜோடி.. ரியல் வாழ்க்கையில் ரொமான்ஸ் ஜோடி..80 வருசத்துக்கு முன்னாடியே பெயர் எடுத்த இணை!

தமிழ் திரை உலகில் ஜோடியாக காமெடி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர் என்பது நிறைய பேர் அறிந்த தகவல் தான். அதிலும் டக்கென நினைவுக்கு வரும் என்.எஸ்.கிருஷ்ணன் – டி ஏ மதுரம், தங்கவேலு – சரோஜா போன்ற காமெடியில் கலக்கிய நட்சத்திர ஜோடிகளுக்கு எல்லாம் முன்னோடியாக கடந்த 1940 களில் இருந்தவர்கள் தான் ரத்தினம் மற்றும் ராஜகாந்தம் ஆகியோர். 1939 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் இவர்கள் காமெடி கதாபத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கோவையை சேர்ந்த ராஜகாந்தம் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறு வயதிலேயே நாடக உலகில் காலடி எடுத்து வைத்ததால் பல நாடகங்களிலும் இவர் நடித்து பெயர் எடுத்துள்ளார். இ ந்த நிலையில் தான் பிரபல காமெடி நடிகர் காளி என் ரத்தினம் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்து பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி கேரக்டரில் பட்டையைக் கிளப்பி உள்ளனர்.

குறிப்பாக 1941 ஆம் ஆண்டு வெளியான சபாபதி என்ற திரைப்படத்தில் டி ஆர் ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் காளி என் ரத்தினம் மற்றும் ராஜகாந்தம் ஆகியோர் காமெடியில் கலக்கி இருப்பார்கள். தொடர்ந்து ராணி, ஸ்ரீ முருகன், வால்மீகி, வேதாள உலகம் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

rajakandham

முழுக்க முழுக்க காமெடி கேரக்டரில் நடித்த ராஜகாந்தம் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் தமிழ் திரை உலகில் கிடைத்தது.  கிருஷ்ண பக்தி, பொன்முடி, மாங்கல்யம், பெண்ணரசி  போன்ற படங்களில் நடித்த அவர் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான முதலாளி என்ற திரைப்படத்தில் ஹீரோ எஸ் எஸ் ராஜேந்திரனின் அம்மாவாக நடித்திருப்பார்.

இதனை அடுத்து குமாரராஜா  போன்ற படங்களில் நடித்த நிலையில் சிவாஜி கணேசன் நடித்த பாலும் பழமும் என்ற திரைப்படத்தில்  மருதாயி என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்திருப்பார். அதேபோல் நவராத்திரி, மெட்ராஸ் டு பாண்டிச்சேரி போன்ற படங்களில் நடித்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு 1979 ஆம் ஆண்டில் மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் விஜயன் அம்மாவாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை திரையில் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு கிடைத்தது.  ஆனால் அதன் பின்னர் அவர் மீண்டும் திரையுலகில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் நிலா பெண்ணே என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.

நடிகை ராஜகாந்தம் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவு தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.