அதிகாலை 4 மணிக்கு போன் செய்த கலைஞர்.. உடனடியாக பம்பரமாகச் சுழன்று வேலை செய்த இயக்குநர் விக்ரமன்.. எதற்கு தெரியுமா?

‘புது வசந்தம்‘ படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து உறவுகளுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆழமான சிந்திக்க வைக்கும் வசனங்களால் பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்.

தன்னுடைய முதல் படத்திற்கே சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருதைப் பெற்றவர். தொடர்ந்து கோகுலம்,பு புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பல ஹிட் படங்களைக் கொடுத்தார். குறிப்பாக இவர் எடுத்த அனைத்துப் படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன.

காரணம் கதை மற்றும் குடும்பத்துடன் இவர் திரைப்படங்களைக் பார்த்து ரசிக்கும் காட்சி அமைப்புகள், ஆழமான வசனங்கள் என்பனவற்றால் விக்ரமனுக்கு  இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். மீண்டும் அடுத்து இதுபோன்ற படங்களை இயக்கி குடும்பங்களை தியேட்டருக்கு வரவழைப்பாரா என்று ரசிகர்களை ஏக்கத்தில் வைத்திருக்கும் அற்புத இயக்குநர்.

இவர் இயக்கத்தில் 2000 ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் வானத்தைப் போல. அடிதடியில் கலக்கி வந்த கேப்டனை அழகான கிராமத்து அண்ணனாக மாற்றி அண்ணன்-தம்பி உறவினை வழக்கம்போல் தனது ஸ்டைலில் எமோஷனலாக எடுத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தவர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்தப் படத்தினைப்  போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.

நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?

பின்னர் கலைஞரின் உதவியாளர் அமிர்தத்திடம் தலைவரை வைத்து படத்தின் வெற்றி விழாவினைக் கொண்டாடலாம் என நினைக்கிறேன். அவரது அனுமதி வாங்கித் தர முடியுமா என்று கேட்க, அமிர்தம் கலைஞரிடம் சொல்லியிருக்கிறார். அதற்கடுத்து சில தினங்களுக்குப் பிறது அதிகாலை 4 மணியளவில் கலைஞரிடமிருந்து இயக்குநர் விக்ரமனுக்கு அலைபேசி ஒலிக்க, கலைஞர் வானத்தைப் போல படத்தினைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். பின்னர் விக்ரமனும் தனது வெற்றிவிழா ஆசையைக் கூற நீ ஏற்பாடு செய் என்று கலைஞர் கூறியிருக்கிறார்.

அதன்பின் அமிர்தத்திடம் எந்த தேதியில் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்க நாளை மறுநாளே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூற, உடனே பரபரப்பாகியிருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.

உடனடியாக அழைப்பிதழை தயார் செய்து, பின்னர் எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் இசை வேலைகளைக் கொடுத்து, படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு காமராசர் அரங்கத்தில் நடந்த வெற்றி விழாவில் கலைஞர் கருணாநிதி கையால் ஷீல்டு பெற வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன். ஒரே நாளில் அத்தனை வேலைகளையும் செய்து முடித்தாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews