நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?

ஏட்டிலும் எழுத்திலும் எழுதப் படாத இலக்கியங்களாகத் திகழும் நாட்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து பின்னாளில் இசை உலகின் பிதாகமகனாக ஜொலித்தவர் தான் சலீல் சௌத்ரி. நாம் நினைப்பது போல் அவர் தமிழ் இசையமைப்பளார் கிடையாது. ஆனால் இன்று இசை மேதைகளாக இருக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கே குருவாக விளங்கியவர்தான் இந்த சலீல் சௌத்ரி.

வங்கத்து மண்ணில் பிறந்து நம்மூரில் வயல்வெளிகளில் களைப்பு தெரியாமல் பாடும் நாட்டுப்புறப் பாடல்களைப் போல, அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் பணிக் களைப்பு தெரியாமல் அங்குள்ள மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்களை தனது சிறுவயது முதலே கேட்டு கேட்டு வளர்ந்தவர்.  இதன்பால் ஈர்க்கப்பட்டு பின்னர் தனது தந்தை மற்றும் சகோதரனிடமிருந்து மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசையை முறைப்படி கற்றார்.

ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி, செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்.. தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்

அதன்பின் இவர் செய்தது தான் புதுமைகளின் அடையாளமாக விளங்கியது. தேயிலைத் தோட்டங்களில் பாடிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தார். நாட்டுப்புற இசையுடனும், மேற்கத்திய இசையைச் சேர்த்து அந்தப் பாடல்களுக்கு அழியாப் புகழ் சேர்த்தார்.

அதன்பின் தனது 20-வயதில் வங்கத்தில் முதல் பாடலை இசைத்து புகழ் பெற்றார். இசைப்பது மட்டுமின்றி பாடல்கள் இயற்றுவதிலும் பேரார்வம் கொண்டவராகத் திகழ்ந்த சலீல் சௌத்ரி பல பாடல்களை தானே இயற்றி அவற்றிற்குப் புதுவிதமாக மெட்டமைத்து அந்தப் பாடல்களை ஹிட் ஆக்கினார்.

பல்வேறு மெட்டுக்களை அமைத்து அதனை பல்வேறு பாடகர்களைக் கொண்டு ஒரு சிறந்த இசைக்கோர்ப்பாளராகவும் விளங்கினார். இசை உலகில் புது வித பல முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். வங்கத்தில் இசையமைத்துக் கொண்டிருந்தர் இந்தி சினிமா உலகில் நுழைந்தார்.

1958-ல் இவர் இசையில் வெளிவந்த மதுமதி திரைப்படத்தில் இடம்பெற்ற 11 பாடல்களும் ஹிட் ஆகி இந்திய சினிமா உலகின் இசை ஜாம்பவனாகத் திகழ ஆரம்பித்தார்.

இந்தியில் பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் அடுத்து மலையாள தேசத்தில் நுழைந்து அங்கும் கொடிகட்டிப் பறந்தார். முக்கியமாக மலையாளத்தில் இன்றுவரை ஹிட் பாடலாக எந்த மொழி பேசுபவரும் அறிந்த பாடலான செம்மீன் படத்தில் இடம்பெற்ற ‘கடலினக்கர போணோரே’, ‘மானச மைனே வரூ’ போன்ற பாடல்கள் இவரைத் தென்னிந்தியாவில் பிரபலப்படுத்தின.

அடுத்தாக தமிழில் இன்றும் சூப்பர் மெலடி பாடலாக அழியாத கோலங்கள் படத்தில் இடம்பெற்ற  ‘ பூ வண்ணம் போல நெஞ்சம்’ ‘நாள் எண்ணும் பொழுது’ என்ற பாடல்கள் இவரின் இசைப் பெருமையைப் பேசின. இவர் வழி வந்தவர்கள் தான் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும். இளையராஜா இவர் குழுவில் கித்தார், காம்போ ஆர்கன் கலைஞராகப் பணியாற்றினார். இப்படி இந்திய இசையுலகின் முடி சூடா மன்னராக விளங்கியிருக்கிறார் சலீல் சௌத்ரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...