பாக்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த கலைஞானம்… எதுக்குன்னு தெரியுமா?

இது நம்ம ஆளு படத்தில் கதை ரொம்பவே வித்தியாசமானது. இளைஞன் ஒருவன் பிராமணர் வேடமிட்டு அங்குள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பது போன்ற நகைச்சுவை கதை. படத்தில் கிருஷ்ண ஐயராக கலைஞானம் நடித்து இருந்தார். பாக்யராஜ் கதை, வசனம் எழுதி நடித்து இருப்பார். ஷோபனா கதாநாயகி.

படத்தில் பாக்யராஜ் முதலில் 7 காட்சிகளைப் பற்றி கலைஞானத்திடம் எடுத்துக்கூற படம் நல்லா தானே இருக்குன்னு சொல்கிறார் கலைஞானம். அதன்பிறகு அதை 15 காட்சிகளாக மாற்றிக் கொடுத்தாராம். அதுவும் அருமையாக இருந்ததாம். இப்போது எழுத்தாளரும் நடிகருமான கலைஞானம் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

இது நம்ம ஆளு படத்தில் ஐயராக நடித்து இருப்பேன். மசூதிக்குப் போனா குல்லா போட்டுக்கணும். சர்ச்சுக்குப் போனா சிலுவை போட்டுக்கணும். கோயிலுக்குப் போனா பூணூல் போட்டுக்கணும். அப்ப தான் அங்கங்க போயி பொழைக்க முடியும்னு சொல்வேன். அதுக்கு பாக்யராஜ் போயா போலி அய்யர்னு சொல்லிடுவாரு. இரு இரு… எங்கேப் போயிடுவன்னு சொல்வேன். அந்த சீன் ரொம்ப நகைச்சுவையா இருக்கும்.

படத்துல ஐயர் சம்பந்தப்பட்ட கதைங்கறதால பாலகுமாரனை வைத்து இயக்கலாம்னு சொன்னேன். அவர் பெரிய எழுத்தாளர். ஐயர்ங்கறதால ஏதாவது கதைல குத்தம் குறை இருந்தா அவரே பார்த்துக்குவாருன்னு சொன்னேன். அப்படியே போட்டாச்சு.

Kalaignanam
Kalaignanam

விடிஞ்சா கோபிச்செட்டிப்பாளையத்துல சூட்டிங். அந்த ஐயர் யாரு? வெண்ணிற ஆடை மூர்த்தியைப் போடலாமான்னு கேட்குறேன். இருங்கண்ணே…ன்னு சொல்றாரு. ஏன் இப்படி தாமதம் பண்ணினாருன்னு பின்னால தான் தெரிஞ்சது. என்னையே நடிக்க வைக்க பிளான் பண்ணினாரு. நீங்க அந்தக் கேரக்டருக்குக் கரெக்டா இருக்கும்னு சொன்னாரு. நாளைக்கே அந்த கிருஷ்ண ஐயர் வேஷத்துல நீங்க தான் நடிக்கிறீங்க. நான் போயி இனி நடிக்க முடியாது. போய்யான்னு சொல்லிட்டாரு.

என்னுடைய கடனைத் தீர்க்கத் தான் இந்தப் படமே எடுத்தது. காலைல எனக்கு மேக் அப் போட்டான். வேற வழியில்ல. எனக்கு எடுக்குற படமாச்சே. 2 நாளா எனக்கு மேக் அப் போட்டும் ஷாட் வரல. 2 நாளா நான் தான் வேணும்னே ஷாட் எடுக்கல. நீங்க ஒரு நிலைக்கு வரட்டும்னு தான் அப்படி செஞ்சேன்னாரு.

மேற்கண்ட தகவல்களை கலைஞானம் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...