தெலுங்கில் டாப் ஹீரோவுக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால், முதன்முதலில் விவேக் ஓபராய் மற்றும் ஐஸ்வாராயுடன் இணைந்து இந்தி படம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அந்த படம் சுமார் வெற்றியை அடைந்தது.

காஜல் அகர்வாலுக்கு தமிழில் முதல் படம் பேரரசு இயக்கிய பழனி. அதில் பரத்திற்கு ஜோடியாக துறுதுறு பெண்ணாக நடித்திருப்பார். பின் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் ஒருசில சீன்கள் மட்டும் வந்து போவார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சரியான வரவேற்பு கிடைக்காத காஜல் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

ராம் சரணுடன் அவர் நடித்த ‘மகதீரா’ படத்திற்கு பிறகே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படங்கள் தொடர்ந்து கிடைக்கத் தொடங்கின. கார்த்தியுடன் நடித்த ‘நான் மகான் அல்ல’ படம், காஜல் அகர்வால் என்ற க்யூட் பெண்ணை அறிமுகப்படுத்தியது.

விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘மெர்சல்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பார். தனுஷூடன் ‘மாரி’ படத்தில் நடித்திருந்த காஜலுக்கு, அதற்கு முன்பே ‘பொல்லாதவன்’ படத்திலேயே நடிப்பதற்கு அழைப்பு வந்துள்ளது. தெலுங்கு படம் ஒன்றில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி விட்டதால், தமிழில் நடிக்க முடியாமல் போனது.

தனுஷூடன் நடித்திருந்த ‘மாரி’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. துல்கர் சல்மானுடன் நடித்திருந்த ‘ஹே சினாமிகா’ படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் நல்ல சப்போர்டிங் கேரக்டராக இருக்கும். கமல்ஹாசனின் படமான இந்தியன்–2வில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.

இப்படம் 2024ம் ஆண்டில் வெளியாகி விடும் என்று எதிபார்க்கப்படுகிறது. மேலும், க்யூட் ஹீரோயினாகவே இருந்து வரும் காஜல் அகர்வால் தற்போது மகேஷ் பாபுவிற்கு வில்லியாக நடிக்க போவதாக செய்திகள் வருகின்றன. இருவரும் ஏற்கனவே ‘பிசினஸ்மேன்’ படத்தில் நடித்திருப்பார்கள்.

இருப்பினும் நெகடிவ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. முதலில் ஐஸ்வர்யா ராயிடம் தான் வில்லியாக நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். அவர் சம்மதிக்காததால் அந்த வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...