இந்திக்குச் செல்லும் ‘என்னை அறிந்தால்‘ : சத்தியதேவ் ஆக நடிக்க இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தமிழில் அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம்தான் என்னை அறிந்தால். தல அஜீத்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் ஆக அஜீத் கலக்கியிருக்க வில்லத்தனத்தில் அருண் விஜய் மிரட்டியிருப்பார்.

மேலும் திரிஷா, விவேக், அனுஷ்கா, பார்வதி நாயர், அனிகா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். உடல் உறுப்பு திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூலிலும், விமர்சனத்திலும் வெற்றியைப் பதிவு செய்தது.

காக்க காக்க  படத்தில் ஜீவனை எப்படி வில்லத்தனத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மிரட்டியிருப்பாரோ அதே அளவுக்கு அருண்விஜய்க்கு மிக வலுவான கதாபாத்திரமாக அமைந்த படம் இது. படத்தில் விக்டராக அருண்விஜய் நடிப்பில் மிரட்ட படம் மெஹா ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. இந்தப் படத்திற்குப் பின் அருண்விஜய்க்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனனின் மேக்கிங்கில் படத்தை மிக ஸ்டைலிஷாக இயக்கியிருப்பார். இந்தப் படத்தில், தாமரையின் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க அனைத்து பாடல்களும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. கௌதம் வாசுதேவ் மேனனின் பல படங்களுக்கு தாமரைதான் பாடல் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிவரை வசூலித்தது.

இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி மிஸ் பண்ணாங்க…? உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நாயகன் சல்மான்கான் இதில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெற்றி கண்ட வீரம்  திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் கட்டமராய் என்ற பெயரில் பவன்கல்யாணும், இந்தியில்  கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் சல்மான் கான், வெங்கடேஷ் நடிப்பிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.

அந்த வகையில் தற்போது என்னை அறிந்தால் படமும் இணைந்துள்ளதால் சல்மான்கான் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி முடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இதன் ரிலீஸ்-க்கு பின் என்னை அறிந்தால் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...