பொய் கணக்கில் கில்லாடி?!! அமீரை சாடும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

’சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. பள்ளி படிக்கும் போது, வகுப்பை கட் அடுத்துவிட்டு படம் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். பெரியவனானதும் நிச்சயம் படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டுமென்பதை அப்போதே முடிவு செய்திருக்கிறார்.

ஞானவேல் ராஜா நடிகர் சூர்யா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். கார்த்தியை வைத்து பல படங்கள் தயாரித்துள்ளார். அதில் சில படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

அதில் ஒரு படம்தான் பருத்திவீரன் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான படம். கிராமத்து கதைக்களத்தில், கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சரவணன், என பலரும் நடித்து அசத்தி இருப்பார்கள்.

நெகட்டிவ் கிளைமாக்ஸை கொண்ட படமாக இருந்தாலும், கதையின் போக்கும், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. அதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

முதல் படமே கார்த்திக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பருத்திவீரன் படத்தை தயாரித்தவர் ஞானவேல் ராஜா தான். சமீபத்தில் இயக்குனர் அமீர் ஜப்பான் படவிழாவிற்கு என்னை அழைக்கவில்லை, சூர்யா குடும்பத்திற்கு நான் மிகவும் நெருக்கமானவனாக இருந்தேன்.

இருந்தாலும் எனக்கு அழைப்பு விடுக்காமல் தவிர்த்து விட்டனர் என்று கூறி இருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் பேசுகையில், அமீர் பொய் கணக்கு எழுதுவதில் வல்லவர். பருத்தி வீரன் படத்தில் 35 பன்னிகள் ஒரு காட்சியில் வரும் அதை 250 பன்னிகள் என கணக்கு எழுதினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கணக்கு கேட்ட போது, பிரேமில் வராத பன்னிகள், படப்பிடிப்பின் போது இறந்த பன்னிகள் எல்லாம் சேர்த்து இந்த எண்ணிக்கை என்று கூறியிருக்கிறார். இப்படி பொய் கணக்குகளை எழுதி தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைப்பதே அமீரின் வேலை என்று தெரிவித்துள்ளார்.

அமீருக்கு இருக்கும் திறமைக்கு ஹாலிவுட்டில் கூட படம் இயக்கலாம். ஆனால் அவர் உழைப்பதற்கு தயாராக இல்லை. ஏமாற்றி பணம் பார்ப்பதையே கொள்கையாக கொண்டுள்ளார் என்று கூறி இருந்தார். இயக்குனர் அமீர் மீதான இத்தகைய குற்றச்சாட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...