Sakthivel: சக்தியை மாட்டிவிட திட்டமிடும் ஜோதி… வைப் ஆன பாட்டியை கதறவிடும் மீனாள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து சிக்கல் சிவபதி சந்தோஷத்தில் இருக்கிறார். சக்தி வேலுவிடம் நான் கர்பமாக இருப்பதாக ஏன் பொய் சொன்ன என்று சண்டையிடுகிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காணலாம். சக்தி இந்த விஷயத்துல பொய் சொல்ல முடியாது. நான் போய் நான் கர்ப்பமாக இல்லை என்பதை சொல்லப் போறேன் என்று வேலுவிடம் கூறிவிட்டு செல்கிறாள். வேலு அவளை தடுக்கிறான். பின்னர் கொஞ்சம் பொறுமையா இரு சக்தி, அப்பாவோட சந்தோஷத்தை கெடுக்க வேணாம். இந்த வீட்டில் இருக்கிறவங்க பற்றி உன்னைவிட எனக்கு நல்லா தெரியும்.

அதனால அவங்கள எப்படி சமாளிக்கணும் அப்படினு எனக்கு தெரியும். அதுக்கும் மேல நீ சொல்லணும்னு விரும்பினா நமக்குள்ள எதுவுமே நடக்கலைனு சேர்த்து சொல்லு என்று சொல்கிறான். சக்தி ஒன்றும் பேச முடியாமல் நிற்கிறாள்.

மறுபுறம் சேரன் வீட்டில் பாட்டி மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே பாட்டை கேட்டுக் கொண்டு வைப் ஆகி கொண்டிருக்கிறார். அங்கு செல்வி பாட்டிக்காக டீ போட்டு கொண்டு வருகிறாள். அதைப் பார்த்த மீனாள் நீ நல்லா டீ போடுவியா, அப்போ எனக்கும் சூடா டீ போட்டு எடுத்துட்டு வா என்று கூறுகிறாள். அதற்கு பாட்டி உங்க அப்பா சிக்கல் சிவபதி சொன்னதை மறந்துட்டியா, உன்னை தட்டி வைக்க சொன்னாரே, உனக்கு எதுக்கு செல்வி டீ போட்டு தரணும். நீ இந்த வீட்டு மருமகள் தான போய் ஒழுங்கா சமைக்கிற வேலைய பாரு இல்லனா உங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன் என்று கூறுகிறார்.

இந்த பாட்டியை எதாவது செய்ய வேண்டும் என்று கோவமாக சமையலறைக்குள் செல்லும் மீனாள் மூக்கில் துணியைக் கட்டிக் கொண்டு கடாயில் ஒரு கைப்பிடி அளவு மிளகாய் வற்றலை வருகிறாள். அந்த நெடி தாங்க முடியாமல் பாட்டியும் செல்வியும் கதறி வீட்டிற்கு வெளியே செல்கின்றனர். அதைப் பார்த்து மீனாள் கைதட்டி சிரிக்கிறாள்.

இங்கு ஜோதி சக்தி எப்போவும் வேலுவிடம் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள், அப்பறம் எப்படி கர்ப்பமாக வாய்ப்பு இருக்கும் என்று தீவிரமாக யோசிக்கிறாள். பின்னர் தேனுவை கூப்பிட்டு உண்மையாகவே சக்தி கர்ப்பமா இருக்கிறாளா இல்லை பொய் சொல்கிறாளா அவள் தான் எப்பவும் என் மகன் வேலுவிடம் கடுகடுன்னு நிக்கிறாளே, அவங்களுக்குள்ள முதல் சடங்கே நடந்த மாதிரி இல்லயே என்று கேட்கிறாள். அதற்கு தேனுவும் சக்தி அப்படிலாம் பொய் சொல்லமாட்டா அத்தை அப்டினு சொல்லிட்டு செல்கிறாள்.

இருந்தாலும் சந்தேகத்தை தீர்க்க மீனாளிற்கு போன் செய்கிறாள் ஜோதி. போனில் மீனாளிடம் அண்ணன் பற்றியும் சக்தி பற்றியும் என்ன நினைக்கிற என்று கேட்கிறாள். அதற்கு மீனாள் சக்தி அத்தாச்சிக்கு அண்ணனை சுத்தமா பிடிக்காது, அண்ணன் தான் அவங்க மேல உயிரா இருக்கு. ஹனிமூன் போனபோது கூட வேலு அண்ணன் சோபால தான் படுத்து தூங்கினான் என்று கூறுகிறாள்.

இதனால் சக்தி கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்துக் கொண்ட ஜோதி சிக்கல் சிவபதியிடம் சக்தியை மாட்டிவிட வேண்டும் என்று யோசிக்கிறாள். பின்னர் சிக்கல் சிவபதியிடம் சென்று எல்லாவற்றையும் கூறுகிறாள். சிக்கல் சிவபதி எதுலதான் சந்தேகம் படணும்னு விவஸ்தை இல்லையா என்று திட்டுகிறார். இருந்தாலும் உன் சந்தேகத்தை தீர்ப்போம் என்று கூறி வேலுவைக் கூப்பிட்டு தேனு கர்ப்பமா இருக்கும் போது குழந்தை எப்படி இருக்குனு பாத்துட்டு வந்த மாதிரி நீயும் சக்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் குழந்தை எப்படி இருக்குனு பாத்துட்டு வா என்று சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...