திடீரென 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜியோ.. அதிர்ச்சி தகவல்..!

ரிலையன்ஸ் ரீடெய்லின் ஆன்லைன் ரீடெய்ல் தளமான ஜியோமார்ட், சிக்கன நடவடிக்கையின் காரணமாக 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் பல ஊழியர்களை செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமேசான், மைக்ரோசாப்ட், டுவிட்டர், கூகுள், மெட்டா, பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் சமீபத்தில் வேலைநீக்க நடவடிக்கையை எடுத்த நிலையில் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான ஜியோமார்ட் போட்டியை கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந் நிறுவனம் லாபம் ஈட்ட முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பணிநீக்கம் குறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வெளியிட்ட அறிக்கையில். ‘பணிநீக்கம் என்பது ஒரு கடினமான முடிவு என்றாலும் ஒப்ரு அவசியமான முடிவு. நீண்ட கால ஆரோக்கியமான வணிகத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணிநீக்க சலுகையை வழங்குவதாகவும், புதிய வேலைகளைக் கண்டறிய உதவுவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஸ்னாப்டீல், க்ரோஃபர்ஸ் மற்றும் பெப்பர்ஃப்ரை உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதால் இந்திய இ-காமர்ஸ் சந்தை சவால்கள் நிறைந்துள்ளதாக தெரிகிறது. ஆன்லைன் வர்த்தக சந்தை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது மற்றும் குறைவான லாபம் கொண்டதாக உள்ளன என்பதால் பெரும்சவால்களை எதிர்கொள்கின்றன.

ஜியோமார்ட்டில் பணிநீக்கங்கள் நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவு என்றாலும், அவை இ-காமர்ஸ் சந்தையில் தோல்வி அடைந்தது என்று கூற முடியாது. இந்நிறுவனம் இன்னும் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews