அலற விட்டதா சைரன்..? ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் எப்படி இருக்கு?

பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படத்தைத் தவிர்த்து, ஜெயம் ரவி ஷோலோவாக ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெறவில்லை. இதனால் கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நரைத்த முடியும், மீசையுமாக நடித்து இன்று வெளிவந்துள்ள படம் தான் சைரன்.

அஜீத் நடிப்பில் மெகா ஹிட் ஆன விஸ்வாசம், கார்த்தி நடித்த சர்தார் ஆகிய படங்களில் கதையாசிரியாக பணிபுரிந்த ஆண்டனி பாக்யராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கொடி படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அனுபமா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

சைரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பின்னனி இசையை சாம் சி.எஸ் கவனித்துக் கொள்ள ஆக்சன் ஏரியாவை திலீப் சுப்ராயன் மிரட்டி உள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் தள்ளப்படும் ஜெயம் ரவி பரோலில் வந்து எப்படி தனது எதிரிகளை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. போலீஸ் அதிகாரியாக ஜெயம்ரவி செய்த குற்றங்களை நிரூபிக்க போராடும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதன்முதலில் ஜெயலலிதாவுக்காக கதை செதுக்கிய கதை பாரதிராஜா.. ஜெ. நடிக்க முடியாமல் போனது இந்தப் படம் தானா?

இந்தப் படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகள் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்போம்.

சைரன் பக்கா கமர்ஷியல் படம் என்றும், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் வரிசையில் தந்தை மகள் சென்ட்டிமெண்ட்டில் உருவாகியுள்ளது எனவும், கிளைமேக்ஸ் காட்சியில் ஜெயம் ரவியின் நடிப்பு அபாராமாக உள்ளது எனவும் MOVIES TAMIL பக்கம் தெரிவித்துள்ளது. படத்திற்கு அவர்கள் கொடுத்த மதிப்பெண்கள் 4/5.

Siren 1

அடுத்ததாக மற்றொரு தளம் வெளியிட்டுள்ள ரிவியூவில் படம் முழுக்க எமோஷனலாகச்  செல்கிறது எனவும், ஜெயம் ரவியின் ஓப்பனிங், இடைவேளை, பிளாஷ்பேக், முந்தைய கிளைமேக்ஸ் ஆகியவை தரமாக உள்ளது எனவும், யோகிபாபு ஜெயம்ரவி காம்பினேஷன் மீண்டும் ஒர்க்அவுட் ஆகியுள்ளது எனவும் கூறியுள்ளது. அனுபமாவின் காட்சிகள் குறைவாக உள்ளது எனவும், மொத்தத்தில் படம் சூப்பர் ஹிட் எனவும் கூறியுள்ளது.

Siren

மற்றுமொரு ரசிகர் ஜெயம் ரவியின் திலகன் கதாபாத்திரம் நன்றாக உள்ளது எனவும், இயக்குநரின் கைதேர்ந்த பக்குவமான எழுத்து இதில் வெளிப்பட்டுள்ளது எனவும், கிளைமேக்ஸ் அற்புதமாக இருக்கிறது எனவும் பகிர்ந்துள்ளார்.

Siren

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...