முதன்முதலில் ஜெயலலிதாவுக்காக கதை செதுக்கிய பாரதிராஜா.. ஜெ. நடிக்க முடியாமல் போனது இந்தப் படம் தானா?

சினிமா உலகின் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா கிராமத்து மண் வாசனையை தமிழ் சினிமாவில் தூவிய பெருமைக்குச் சொந்தக்காரர். ஸ்டுடியோவிற்குள் அகப்பட்டுக் கிடந்த தமிழ் சினிமாவை புதுப்புது லொகேஷன்களில் படம்பிடித்து, கோழி ஓடுவது, இலைகள் அசைவது, கன்று பால் குடிப்பது என கிராமத்து அழகியலைக் கேமராக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அதை திரையில் நிகழ்த்திக் காட்டியவர்.

பதினாறு வயதினிலே படத்தில் ஆரம்பித்த கிராமத்துப் பயணம் இன்று வரை தொடர்கிறது. சினிமாவிற்கு பல இயக்குநர்களையும், ஹீரோ,ஹீரோயின்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சினிமாக் கனவை நனவாக்கியவர். நான்கு தலைமுறை நடிகர்களுடன் இயக்கி, நடித்து இன்று வரை தனது கலைப்பணியைத் தொடர்ந்து வருகிறார். தனது முதல் பட வாய்ப்பிற்காக சென்னையில் இவர் ஏறாத ஸ்டுடியோவே இல்லை எனலாம்.

பலரிடம் சான்ஸ் கேட்டு தனது அபார உழைப்பால் இன்று இயக்குநர் இமயமாகத் திகழ்கிறார். இவர் தனது முதல் படமான 16 வயதினிலே படத்தை இயக்கும் முன்னரே வேறொரு கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அந்த படத்தின் கதையை கூட, நடிகை ஜெயலலிதாவிடம் கூறி, நடிப்பதற்காக சம்மதமும் வாங்கியுள்ளார். ஹீரோவாக முத்துராமன் நடிப்பதாகவும் இருந்தது.

கர்நாடக இசையில் ஆரம்பிக்கும் பாடலில் திடீரென புகுந்து கலக்கிய கிராமிய இசை.. அதான் ராஜாவின் ராஜாங்கம்..

கதையை கேட்டுவிட்டு, சூப்பராக இருக்கிறது. இந்த படம் வெளிவந்தால், இதுவே இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக அமையும் என்று ஜெயலலிதா, பாரதிராஜாவிடம் கூறியுள்ளாராம். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறிவிட்டாராம். இதனால், தனது முதல் படத்தை ஜெயலலிதாவை பைத்து பாரதிராஜாவால் இயக்கமுடியாமல் போய்விடுகிறது. அதன்பின்னர் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடிய 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்திருக்கிறது.

ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன அந்தப் படத்தினை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எடுத்து இந்திய சினிமாவில் நீங்க இடம் பிடித்தார் பாரதிராஜா. அந்தப் படம்தான் புதுமைப் பெண். ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியான புதுமைப் பெண் படத்தில் ரேவதி, பாண்டியன் நடித்திருந்தனர். இப்படத்தில் ஜெயலலிதா ஏற்று நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ரேவதி நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். இப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று பாரதிராஜாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...