வாடா ஓட்டவாய் நாராயணா.. ஒரே காமெடியில் ஒரே ஒரு காட்சியில் நடித்து புகழ் பெற்ற நடிகர்.. உதவிய ஜெயலலிதா!

தமிழ் சினிமா உலகம் எத்தனையோ ஆயிரக்கணக்கான முகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் முன்னணி நட்சத்திரங்களைத் தவிர சில முகங்கள் நமக்கு இன்று வரை ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான் சினிமா கலைஞர்கள் மறைந்தாலும் இன்றுவரை நம் மனதில் நீங்க இடம்பிடித்திருக்கின்றனர்.

சிவாசியைச் சேர்ந்த நாராயணன் தன்னுடைய 15வது வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.  பின்னர் படிப்படியாக வெள்ளித்திரையில் கால்பதித்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் படங்களிலும் ஒரிரு காட்சிகளில் தலைகாட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் பசி நாராயணன். 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பசி படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்ததால் ‘பசி‘ நாராயணன் என்ற அடைமொழியுடன் அறியப்படுகிறார். 1960 முதல் 1990 கால கட்டங்கள் வரையில் பசி நாராயணன் நடித்திருந்தார். குறிப்பாக கவுண்டமணி – செந்திலுடன் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அத்தான்.. நாதா.. வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவன், அவள் டிரெண்டை உருவாக்கிய கண்ணதாசன்.. அந்த ஹிட் பாடல் இதான்!

மேலும் நடிப்பு மட்டுமின்றி நடனம், கதை சொல்லுதல், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் கவுண்டமணியுடன் இவர் நடித்த காமெடிக் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் அதிகம் விரும்பபப்படும் ஒரு காட்சியாகும். “போன் வயர் பிஞ்சி ஒரு வருசம் ஆச்சு…“ என்ற வசனத்திலும் ‘ஓஹோ‘ என ரியாக்சன் காட்டுவதாகட்டும் அந்த சீனில் கவுண்டமணியையே ஓவர் டேக் செய்திருப்பார் பசி நாராயணன். கவுண்டமணி இந்த சீனில் அவரை வாடா.. ஓட்டவாய் நாராயணா என கலாய்க்கும் போது காட்டும் ரியாக்ஷன் இன்றும் மீம்ஸ்களாக வலம் வருகிறது.

இவ்வாறு ஏராளமான படங்களில் இவர் நடித்தபோதும் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அத்துடன் இவரது குடும்பமும் வறுமையில் வாடி வந்தது. 1998 ஆம் ஆண்டு பசி நாராயணன் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தின் வறுமை சூழலை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியதுடன் மூத்த கலைஞர்களுக்கான குடும்ப உதவித்தொகை மாதம் ரூ. 8,125 கிடைக்கவும் வழி செய்தார். இதுகுறித்த தகவல்கள் திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்களிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews