ஒரே நேரத்தில் 6 நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்.. கேக்கவே தலை சுத்துதே!

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

வொர்க் ஃப்ரம் முறை பலருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றது. 8 மணி நேரம் பணியாற்றியவர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் 10 முதல் 12 மணி நேரம் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் மற்றொரு புறமோ வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது மட்டுமின்றி அதிக அளவில் பகுதி நேர வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் ஒரு நபர் தான் ஒரே நேரத்தில் 6 நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதாகக் கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதாவது இவர் இந்த 6 நிறுவனங்களில் பகுதி நேர வேலை பார்ப்பார் என்றுதானே நினைத்தீர்கள், ஆனால் அவர் முழு நேர வேலைதான் பார்க்கிறாராம்.

இந்த செய்தியை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட நெட்டிசன்களோ எங்களுக்கு ஒரு வேலையே பண்ண முடியல, எப்படி பாஸ் ஒரே நேரத்தில் 6 நிறுவனங்கலில் வேலைன்னு ஷாக் ஆகியுள்ளனர்.

இன்னும் சிலரோ அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews