தொகுப்பாளினி டிடி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா…?

திவ்யதர்ஷினி நீலகண்டன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவரை செல்லமாக ‘டிடி’ என்று அழைப்பார்கள். முக்கியமாக தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ‘காபி வித் டிடி’, அன்புடன் டிடி’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். சிறு வயதிலிருந்தே தொகுப்பாளினியாக பணியாற்றிய டிடி ‘ஜோடி நம்பர் 1’, ‘பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’, ‘என்கிட்டே மோதாதே’, ‘ஸ்பீடு’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் அனைத்து திரைத்துறை பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். அவர்களிடம் அவர்கள் போக்கிலேயே கனிவாகவும் ஜாலியாகவும் பேசி தனது கேள்விகளுக்கு நாசூக்காக பதிலை வாங்கிவிடுவார். அதனால் இவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. இவரது மூத்த சகோதரியான ப்ரியதர்ஷினியும் ஒரு தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி தொகுப்பார்களும், புதிதாக வருபவர்களும் கூட டிடியை ரோல் மாடெலாக எடுத்துக்கொள்வர். அந்த அளவிற்கு இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் நேர்த்தியாகவும், உயிரோட்டமானதாகவும் இருக்கும். இவர் தமிழை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக கேட்பதற்கு இனிமையாக இருக்கும். 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். அனால் அந்த வாழ்க்கை 3 வருடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன் பின்பு நிகழ்ச்சிகளில் வருவதை குறைத்துக் கொண்ட டிடி ஒரு கட்டத்தில் விஜய் டீவியை விட்டு விலகிவிட்டார். என்னவாக இருக்கும் என்று யோசித்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விடையளித்து இருக்கிறார்.

அதில் டிடி, 2013 ஆம் ஆண்டில் எனது கால் முட்டியில் வலி ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்தேன். அனால் அது தவறாக முடிந்தது. பின்பு அதை சரி செய்வதற்க்காக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த அறுவை சிகிச்சை என்பது இரண்டு முறை பிரித்து செய்ய வேண்டும். முதல் தடவை முடிந்து இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யும் பொழுது ‘ஆட்டோ இம்முயுன் டிசார்டர்’ ஆல் பாதிக்கப்பட்டேன். அதனால் எனக்கு முடக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. கடந்த 10 வருடங்களாக வலியை மட்டுமே அனுபவித்து வந்துள்ளேன். வலியில்லாமல் நான் ஒருநாள் கூட தூங்கியது இல்லை. என்னால் மூன்று நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. ஓடவும் முடியாது. தினமும் காலையில் கண்விழிக்கும் போது வலியுடன் தான் ஒவ்வொரு நாளும் தொடங்கும். அதனால் வீல் சேரும், ஸ்டிக்கும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் இல்லாமல் நான் இல்லை என்ற நிலைமை ஆனது.

இந்த கஷ்டங்களையெல்லாம் மனதில் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த நிலைமையில் மக்களுக்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பேன். அப்படித்தான் நடிக்கவும் ஆரம்பித்தேன். மக்களுக்கு நான் ஒரு முன்னுதாரணகமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என்னால் முடிகிறது என்றால் உங்களாலும் கண்டிப்பாக எதையும் செய்ய முடியும் என்பதை மக்களுக்கு கூற ஆசைப்படுகிறேன். இத்தனை வருடங்களாக மக்கள் மனதில் எனக்கு ஒரு இடம் தந்து என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு மிகப்பெரிய நன்றி, என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews