கொளுத்தும் வெயிலுக்கு எல் நினோ தான் காரணமா… அப்படினா என்ன?

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. பசுபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு தான் எல் நினோ என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.

பசுபிக் கடல் பரப்பு வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வாகும். இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும்.

பருவம் தவறிய மழையும் கேடு, பருவம் தவறிய வெப்பமும் கேடு. இந்த இரண்டுமே மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் தான் உலக கவனம் முழுவதும் இந்த காலநிலை நிகழ்வு மீது குவிந்திருக்கிறது .

இந்தியாவை பொறுத்தவரை எல் நினோ பாதிப்பு அதன் தாக்கத்தை ஏற்படுத்த 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி கழகங்கள் ஆகியவை இணைந்து இந்த தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனைகளை தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சி-க்கும் இடையே உள்ள மோதலுக்கு இது தான் காரணமா?

எல் நினோ-வின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவை பாதிக்கத் தொடங்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரை எல் நினோ காலநிலை நீடித்து வந்ததால் பின்னர் வரும் எல் நினோ ஆண்டில் பருவநிலை பற்றாக்குறைக்கான சூழலை உருவாக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews