நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சி-க்கும் இடையே உள்ள மோதலுக்கு இது தான் காரணமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சிக்கு நீண்ட நாளாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

விஜய்யை தன்னுடைய பல படங்களில் நடிக்க வைத்தது மட்டும் இல்லாமல் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி அரசியல் களத்திற்கும் அடிப்படை அமைத்துக் கொடுத்தவர் எஸ்.ஏ.சி தான்.

விஜய்க்கும் அவர்கள் தந்தைக்கும் மோதல் போக்கு தொடங்கிய நிகழ்வு பற்றி தகவல் தற்போழுது வெளியாகி உள்ளது. தலைவா படத்தின் ரிலீஸின் போது TIME TO LEAD என டைட்டிலுடன் இணைக்கப்பட்ட வாசகம் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை கிளப்பி வலுவான சிக்கல்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தீர்க்க கொடநாடு சென்ற விஜய்யையும் அவரது தந்தையையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு விஜய் மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

கலர் புல்லான,துருப்பிடிக்காத புதிய வகை சிலிண்டர்!.. இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்!..

இந்நிலையில் அவமானப்பட்ட பிறகு மன்னிப்பும் ஏன் கேட்க வேண்டும் என எஸ் ஏ சி அந்த வீடியோவை போட வேண்டாம் என வலியுறுத்தியும், விஜய் கேட்காததே விஜய்க்கும் அவரது தந்தைக்குமான் மோதல் போக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...