பாதியில் நின்ற வணங்கான் படம் குறித்து இயக்குநர் பாலா வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

சூர்யா – இயக்குனர் பாலா கூட்டணியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து தனது 41 வது படத்தில் நடித்துவருகிறார்,இருவரும் இதற்கு முன்பாக நந்தா மற்றும் பிதாமகன் போன்ற வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்து பிரபலமடைந்தார் .பிறகு பாலாவுடன் இணைந்து வணங்கான் ,வாடிவாசல் ,சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் என பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஞானவேல், சுதா கொங்கரா ஆகியோர் பல முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் தெலுங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைப்புகளுடன் வெளியிடப்பட்டது.படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘வணங்கான்’ படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை உருவாக்காத காரணத்தால்தான் படத்தைத் தள்ளி வைத்தார்கள் சூர்யா.இந்த படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடயுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.

விஜய்யின் 67 வது படத்தையும் விட்டு வைக்கல… லோகேஷை விடாமல் துரத்தும் கமல்!

இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாலாவிடம் பேட்டியில் வணங்கான் திரைப்படம் குறித்தும் அதன் பிரச்சனை குறித்தும் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த பாலா “வணங்கான் திரைப்படம் வந்து கொண்டு இருக்கிறது” என சூசகமாக கூறியுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.