விஜய்யின் 67 வது படத்தையும் விட்டு வைக்கல… லோகேஷை விடாமல் துரத்தும் கமல்!

கமல் நடிப்பில் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு,லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டத்தில் இளையதளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிகையுள்ளார்.

மேலும் “தளபதி 67” இல் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது, இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் அவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் விஜய்யை எதிர்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

சைலண்டா காசு பார்க்கும் லாரன்ஸ்! சந்திரமுகி படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சஞ்சய் தத், பிருத்விராஜ் , விஜய் சேதுபதி, கவுதம் மேனன், விஷால் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் படத்தில் முக்கியமான பாத்திரங்களுக்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் ரூ. 160 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் ஒரு சிறப்பு தகவலாக படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் தற்போழுது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.