ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்!! இன்று பலப்பரீட்சை;

எப்போதும் ஐபிஎல் என்றாலே இந்த இரண்டு அணிகள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட் அணிகள் என்று கூறலாம். மேலும் இந்த இரண்டு அணிகள் விளையாடினால் அங்கு அரங்கத்தில் ரசிகர்களின் ஆரவாரமும் அதிகமாகவே காணப்படும்.

அந்த இரண்டு அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகும். ஆனால் பதினைந்தாவது ஐபிஎல் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் அந்த அளவிற்கு ஜொலிக்கவில்லை என்றே கூறலாம்.

ஏனென்றால் புள்ளி பட்டியலில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியில் காணப்படுகிறது. மேலும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இருப்பினும் கூட கடைசி சில ஆட்டங்களில் இந்த இரண்டு அணிகளும் தொடர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இந்த இரண்டு அணிகள் நடப்பு ஐபிஎல் போட்டியில்  இரண்டாவது முறையாக நேருக்கு நேர் மோதுகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 07:30 மணிக்கு ஒன்றோடு ஒன்று மோதுகிறது.

மேலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான ரவிந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.