சுதந்திர தினத்தைப் பற்றி பலரும் அறியாத பல சுவாரஸ்ய தகவல்கள்…!

நம் இந்தியா கிட்டத்தட்ட 200 ஆண்டு காலம் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு இருந்தது.‌ பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நம் நாடு விடுதலை அடைந்தது. நம் நாட்டை பற்றி எவ்வளவு தான் தெரிந்திருந்தாலும் அது போதாது நம் தேசத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஒவ்வொரு இந்தியரும் அறிந்திருக்க வேண்டிய நம் நாட்டைப் பற்றியும், சுதந்திரம் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன அவைகளை பார்க்கலாம்.

india1

1. நம்முடைய தேசியக்கொடியான மூவர்ணக் கொடி முதன்முதலாக வடிவமைக்கப்பட்டது இல்லை. நம் தேசியக்கொடி பலவிதமான மாறுபாடுகள் செய்யப்பட்ட பின் உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள நம்முடைய தேசியக்கொடியை 1921 ஆம் ஆண்டு பெஸ்வாடாவில் பிங்கலி வெங்கையா என்பவர் உருவாக்கினார்.

2. தேசியக்கொடியை தயாரிக்கும் உரிமை காதி மற்றும் கிராம தொழில் வாரியத்திற்கு மட்டுமே உண்டு.

India

3. நம்முடைய முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தின் பொழுது நம் தேசத்திற்கு என தேசிய கீதம் இல்லை. நம் நாட்டின் தேசிய கீதமான ஜன கண மன எனும் பாடல் 1911 ஆம் வருடமே எழுதப்பட்ட இருந்தாலும் அது தேசிய கீதமாக 1950இல் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

4. நமது முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தின் பொழுது நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பங்கேற்கவில்லை. அவர் வங்காளத்தில் நடைபெற்ற இந்து முஸ்லிம் கலவரத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

india2

5. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டாம் ஆண்டு நிறைவை குறிக்கின்ற வகையில் ஆகஸ்ட் 15ஐ இந்தியாவின் சுதந்திர தினமாக மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்தார்.

6. மவுண்ட் பேட்டர்ன் பிரபு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் சுதந்திர தினத்திலும்  கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தினால் தான் பாகிஸ்தானிற்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

7. இந்தியா மட்டும் இல்லாமல் பக்ரைன், லிச்சென்ஸ்டீன், தெற்கு மற்றும் வடக்கு கொரியா காங்கோ ஆகிய நாடுகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

8. கோவா 1961ம் ஆண்டு வரை போர்ச்சுகீசிய மாநிலமாக இருந்து வந்தது. அதன் பின் தான் இந்தியாவுடன்  இணைந்தது.

india3

9. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல இந்தியாவின் அலுவலக மொழியாக மட்டுமே 1949 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தேசபக்தியை தூண்டும் தமிழ் சினிமா பாடல்கள்!!!

10. சுதந்திரத்திற்குப் பிறகு 560 சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது இதில் ஹைதராபாத் தான் கடைசியாக இந்தியாவில் இணைந்த பகுதியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews