இந்தியன் 2 மற்றும் 3 படத்திற்கான ரிலீஸ் தேதி முடிவு செய்த லைக்கா நிறுவனம்!

கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளை தொடர படக்குழு முயற்சித்துள்ளது. கடந்த நான்குகளாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 6 மணி நேரமாக உள்ளதால் இந்த படத்தை இரண்டாகப் பிரித்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியன் 2 படமானது இந்தியன் படத்தின் முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. அதாவது கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் சுமார் 90 வயது உடையதாக இருக்கும் என புறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ரொ வெளியாகி ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் விவேக், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மனோபாலா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரக் கூட்டமே இணைந்து நடித்துள்ளது.மேலும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வில்லனாக நடிக்க உள்ளார்.

350 கோடி பட்ஜெட்டில் ஒரே படமாக தயாரிக்கப்பட இருந்த இந்தியன் 2 திரைப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் இந்தியன் 3 திரைப்படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த காட்சிகளுக்காக நடிகர் கமல்ஹாசனிடம் மேலும் 30 நாட்கள் கால் சீட் வாங்கப்பட்டுள்ளது. அதற்காக கமல்ஹாசனுக்கு 120 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 3 திரைப்படத்தின் இயக்கத்திற்காக இயக்குனர் சங்கர் அவர்களுக்கும் கூடுதலாக சில கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் லெவல் ஆக்சனில் உருவாகும் கமலின் 234வது திரைப்படம்!

இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் இராணுவ வீரனாக ஒரு படத்திலும் மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234 படத்திலும் காலம் பிசியாக நடிக்க உள்ளார். இந்த படங்களின் பட பிடிப்புகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 மற்றும் 3 படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை லைக் ஆன நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 திரைப்படம் அடுத்த 2014 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆறு மாத கால இடைவேளைக்குப்பின் இந்தியன் 3 திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியிட உள்ளதாகவும் உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு கமலின் அடுத்தடுத்த படங்களின் வருகையால் தலைவரின் சம்பவத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews