இந்தியா

மோடி ஒரு தீர்க்கதரிசி… அவர் சொன்னதால் தங்கம் வாங்காமல் இருந்தோம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் தவிர்ப்பு.. தங்க நகை வர்த்தகர்கள் எழுதிய கடிதம்.. மோடி சொல்லும்போது 90 கோடி ரூபாயாக இருந்த தங்கம் இன்று 1.25 கோடி ரூபாயாக சரிவு..மோடி எப்படி தங்கம் விலை தலைகீழாக சரியும் என்று கணித்தார்? சர்வதேச பொருளாதார அறிஞர்கள் ஆச்சரியம்.. இந்திய நாட்டு மக்களையும் நகை வியாபாரிகளையும் காத்தவர் மோடி.. குவியும் பாராட்டுக்கள்…

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், தேவையற்ற தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்றதால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் பெரும் நிதி இழப்பிலிருந்து தப்பியுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 22-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு சி.டி.ஐ அமைப்பு அதிகாரப்பூர்வமாக நன்றி தெரிவித்துத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த அறிவுறுத்தலைப் பின்பற்றித் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போட்ட நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் சேமிப்புப் பணம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு பாராட்டியுள்ளது.

கடந்த மே மாதம் பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்தபோது, ஒரு கிலோ தங்கத்தின் விலை சுமார் 1.90 கோடி ரூபாயாக உச்சத்தில் இருந்தது. மேலும், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 22-ஆம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ தங்கத்தின் விலை 1.25 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் கிலோவுக்குச் சுமார் 65 லட்சம் ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. நகை வியாபாரிகள் வழக்கமாகப் பல மாதங்களுக்குத் தேவையான தங்கத்தைக் கையிருப்பில் வைத்திருப்பார்கள் என்பதால், அதிக விலையில் வாங்கியிருந்தால் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சி.டி.ஐ சுட்டிக்காட்டியுள்ளது.

ஆரம்பத்தில் பிரதமரின் இந்த ஆலோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில நகை வியாபாரிகளும் வர்த்தகர்களும்கூட, தற்போதைய விலை வீழ்ச்சியைக் கண்ட பிறகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மற்றும் நேரடிச் சந்தையில் தங்கம் வாங்கி விற்கும் சிறு வர்த்தகர்களும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்துள்ளனர். டெல்லியில் மே 9-ஆம் தேதி 24 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 15,250 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், தற்போது அது 12,523 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த 2,727 ரூபாய் விலை குறைப்பு லட்சக்கணக்கான குடும்பங்களின் சேமிப்பைப் பாதுகாத்திருப்பதாக சி.டி.ஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்திருப்பது தற்போது நடைபெற்று வரும் திருமணக் காலத்தில் சாமானிய மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இந்தத் திருமண சீசனில் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ள நிலையில், குறைந்த விலையில் நகை வாங்குவது குடும்பங்களுக்கு எளிதாகியுள்ளது. அதே சமயம், நகைக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்பு 10 கிராம் நகை வாங்கிய வாடிக்கையாளர்கள், தற்போது 5 கிராம் நகைகளை வாங்குவதையே விரும்புவதாகவும், மக்கள் தங்கம் வாங்குவதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும் சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் தங்க இறக்குமதி கணிசமாகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 9.6 பில்லியன் டாலராக இருந்த தங்க இறக்குமதி, இந்த ஆண்டு செப்டம்பரில் 81 சதவீதம் குறைந்து 1.8 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது. அதேபோல், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் தங்க இறக்குமதியின் மதிப்பு 27.3 சதவீதம் சரிந்து 19.27 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இறக்குமதி வரி உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவிய விலை மாற்றங்களே இந்தத் தேவைக் குறைவுக்கு முக்கியக் காரணங்கள் என்று பொருளாதார வல்லுநர்கள் விளக்குகின்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தைகளில் நிலவும் ஊக வணிகம் மற்றும் பதுக்கலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து இது போன்ற வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று சி.டி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது. அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பும் ஆலோசனையும் சந்தையை நிலைப்படுத்துவதுடன், சிறு வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரதமரின் ஒரு வேண்டுகோள் நாட்டின் பொருளாதார நலனைக் காத்ததுடன், தனிநபர் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளதாக ஒட்டுமொத்த வர்த்தகச் சமூகமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.