ஜப்பானையும் ஜெர்மனியையும் முந்துகிறது இந்தியா.. இதையெல்லாம் பாகிஸ்தான் நினைத்து கூட பார்க்க முடியாது..!

இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. IMF…

gdp

இந்தியா, 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை எல்லாம் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

IMF என்ற சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய World Economic Outlook அறிக்கையின்படி, இந்தியா 2025ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் nominal மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு $4,187.02 பில்லியன் என்ற நிலையில், ஜப்பானின் GDP $4,186.43 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

உலகின் மிக வேகமாக வளர்ச்சியடையும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையை மீறி, இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6%க்கு மேலான வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஐ.எம்.எப். கணிக்கிறது. இதற்கு மாறாக, ஜப்பான் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் வெறும் 0.6% வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது நான்காவது இடத்தில் உள்ள ஜெர்மனிக்கு, வர்த்தக அழுத்தங்கள் மற்றும் யூரோ மண்டலத்தின் மந்த வளர்ச்சி காரணமாக வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக உள்ளன. 2025ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு ஜீரோ வளர்ச்சி அதாவது வளர்ச்சி இல்லை  என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு வெறும் 0.9% வளர்ச்சியே அமையும். 2028க்குள் இந்தியா ஜெர்மனியையும் முந்தி, $5,584.48 பில்லியன் GDP-யுடன் மேலும் உயர்வடையும் என ஐ.எம்.எப். முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு அமெரிக்கா $30.5 டிரில்லியன் GDP-யுடன் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக தொடரும். சீனா $19.2 டிரில்லியனுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும். ஆனால், இந்த இரு நாடுகளும் எதிர்காலத்தில் மந்த வளர்ச்சி நிலையை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு யூரோ பகுதி வெறும் 0.8% மற்றும் 2026ல் 1.2% வளர்ச்சி மட்டுமே பெறும் என கணிக்கப்படுகிறது. பிரான்ஸ் 0.6% மற்றும் 1% வளர்ச்சியையே காணும். இங்கிலாந்து  1.1% மற்றும் 2026ல் 1.4% வளர்ச்சி பெறும். இதில் ஸ்பெயின் மட்டும்  உறுதியான 2.5% வளர்ச்சியுடன் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி பாதையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது. வலுவான உள்நாட்டு தேவை, மக்கள்தொகை ஆதாயம் மற்றும் தொழில்நுட்பமயமான துறைகள் ஆகியவை இந்தியாவின் நீண்ட கால எழுச்சிக்கு வழிவகுக்கும். இதன் மூலம் இந்த பத்தாண்டுகள் முடிவில் உலக அதிகார அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பும் உருவாகும்.