சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன இளையராஜா!

நடிகர் திலகம் சிவாஜி நடிகராக நடித்து எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சிறப்பான படம் கவரிமான். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில் கர்நாடகா ராக ஆலாபனைகளுடன் ஒரு பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த பாடலை பாடியவர் கே ஜே ஜேசுதாஸ். மிகவும் கடினமான கர்நாடகா ராக ஆலாபனைகளுடன் ஒரு பாடலை இசை அமைத்திருந்தார் இசைஞானி இளையராஜா.

சிறந்த பாடகர்களுக்கே இந்த பாடலை பாடுவது சிரமமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் பாடலுக்கு ஏற்றார் போல் நடிகர் திலகம் எப்படி நடிக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி இளையராஜாவின் மனதில் இருந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் பாடல் காட்சிகளை பார்த்த இளையராஜா சிவாஜியின் நடிப்பை பார்த்து மெய்மறந்து புகழத் தொடங்கினார். படப்பிடிப்பில் அப்படி என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விரிவான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பஞ்சு அருணாச்சலம் சிவாஜி அவர்களை கவரிமான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இளையராஜாவின் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம்பெற்றது இந்தப் படத்தில் தான். ப்ரோமா பாரமா என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாடி டிவி கிருஷ்ணன் அவர்கள் வயலினும் டிவி கோபாலகிருஷ்ணன் மிருதங்கமும் இணைந்து இந்தப் பாடலுக்கு இசையமைத்தனர்.

சரியான நேரத்தில் சிவாஜி இந்தப் பாடலுக்கு ஏற்றால் போல் வாயசைத்ததை பார்த்து இளையராஜா வியந்து உள்ளார். ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று ப்ரோமா பாரமா என பாடல் வரிகள் தொடங்குமாறு பாடல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

ராகம் பாட ப்ரோமா பாரமா என பாடல் வரிகள் தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது இசையமைத்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் இப்பொழுது தொடங்கும் என்ற அறிகுறி தெரிந்து இருக்கும். அதற்கு ஏற்றால் போல் உடனே வாயசைத்தும் இருக்கலாம். ஆனால் இந்த பாடலில் ராகங்கள் பாட வரும் தம்புரா இசை மட்டுமே இசைக்கப்பட்டு இருக்கும்.

கவலை மறந்து சிரிக்க வேண்டுமா.. நாகேஷின் இந்த 7 திரைப்படங்கள் போதும்!

அப்படி இருக்கையில் அந்த தம்புரா இசை எவ்வளவு நேரம் செல்லுமோ அதை சரியாக கவனித்து பாடலில் ஜேசுதாஸ் குரல் வரும் நேரத்தில் அதற்கு ஏற்றார் போல் சிவாஜி அவர்கள் வாயசைத்திருப்பார். நீண்ட நேரம் இசைக்கு பின் பாடல் வரும் நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்துள்ளார் சிவாஜி.

இதை பார்த்த இளையராஜா எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிவாஜி சும்மா ஏனோதானோ சினிமாவுக்கு வந்தவன் நினைச்சியா… இதெல்லாம் முடியாவிட்டால் ஏண்டா ஒருத்தன் நடிகராக இருக்கணும் என்று கேட்டால் சிவாஜி. நடிகர் திலகம் என சும்மாவா பட்டம் கொடுத்தார்கள் என நடிப்பின் மீது கொண்ட பக்தியை சிவாஜி விரிவாக கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...