கல்வி

சென்னை ஐஐடி-யில் புதிய துறை தொடக்கம்; கட்டணம் முதல் கோர்ஸ் வரை முழு விவரங்கள் இதோ!

சென்னை ஐஐடி யில் புதிய துறை தொடக்கம் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்கிற புதிய துறையை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளது ஐஐடி மெட்ராஸ்

“4 ஆண்டு கால கல்வி இளங்கலை மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் (Bachelor of Science in Medical Sciences and Engineering) பாடத்திட்டத்தில் ஜூலை மாதம் நடைபெறும் IISER நுழைவு தேர்வு எழுதி சேரலாம் என்றும் இதற்கு ஆண்டுக்கு 2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ ஐ டி இயக்குனர் காமகோடி தெரிவித்தார்”

சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது…இந்த துறையினை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் cognizant இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் மற்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த தேவையான திறன்களுடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தயார்படுத்துவது துறையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐடி இயக்குனர் காமகோடி, ஐஐடி வரலாற்றில் முக்கிய தினம்…பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க ஒரு பெரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

எந்த மருத்துவமனை சென்றாலும் அறுவை சிகிச்சைக்கு இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம்…அதில் எதவாது கோளாறு என்றால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் அல்லது வேறு நிபுணர்களிடம் இருப்பதில்லை.

மருத்துவத்துறையை பொறியியல் கண்ணோட்டத்துடன் பார்க்க போகிறோம்…நாட்டுக்கு மிகவும் முக்கியம் இது தான்

95 சதவீத எலக்ட்ரானிக் சாதனங்கள் இறக்குமதி தான் செய்யபடுகிறது…இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்கள் இயந்திரங்கள் தயாரிக்க வேண்டும், இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும்… மருத்துவ தொழில் நுட்பம் கொண்ட இயந்திரங்கள் உபகரணங்களை முற்றிலும் இந்தியாவிலேயே நமக்கு நாமே தயாரிக்க வேண்டும்…இதற்கான முதல் படியை ஐ ஐ டியில் எடுத்து உள்ளோம்.

உலகத்திலேயே இரண்டாவதாக இந்தியாவில் முதன்முறையாக பி எஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடம் ஐஐடி மெட்ராஸில் தொடங்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியல் கணிதம் உயிரியல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் IISER நுழைவு தேர்வு எழுதி BS படிப்பில் சேரலாம் முதற் கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்ட உள்ளது. இந்த பாடம் முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.

கணித அறிவியலுக்கு போட்டியாக மருத்துவர் இருக்கும் என்றும் இந்தத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

எம்பிபிஎஸ் ,பி டி எஸ் ,எம் டி,எம் எஸ் முடித்த மருத்துவர்களுக்கு முனைவர் பட்டம் பெற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மருத்துவர்கள் அந்த பாடத்திட்டங்களில் சேர்ந்து முனைவர் பட்டங்களை பெற்றுக் கொள்ளலாம்.

*ஒரு மருத்துவர் உபகரணங்களை பயன்படுத்துகிறார் என்றால் வெறுமனே அதை பயன்படுத்த மட்டும் செய்யாமல் இந்த உபகரணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள இந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*அனைவருக்கும் மருத்துவம் என்கிற நோக்குடன் எங்கள் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி உள்ளோம்.

4 ஆண்டுகால கல்விக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 12 ஆம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்கள் நிறைய பேர் ஐஐடி டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்கள்.

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் IISER தேர்வு எழுதி ஆகஸ்ட் மாதத்தில் BS படிப்பில் சேரலாம்MBBS,BDS படித்தவர்கள்,MS,MD படித்த மருத்துவர்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முனைவர்(பிஎச்டி) படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்

முதற்கட்டமாக BS படிப்புக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் போகப்போக இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தால் அதேபோல முனைவர் பட்டத்திற்கு 20 முதல் 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

*புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் 5 பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1.பி எஸ் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (4 ஆண்டு கல்வி)

2. மருத்துவர்களுக்கு முனைவர் பட்டம்

3. மருத்துவத்தில் முதுகலை அறிவியல் ஆராய்ச்சி

4. எம் எஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் (MS Medical Sciences and Engineering)

5. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு (பி எச் டி) படிப்பு

Published by
Amaravathi

Recent Posts