டைட்டில் செண்டிமெட்டில் சிக்கி ஹிட் வாய்ப்பினை இழந்த படம்.. நல்ல கதை இருந்தும் பிளாப் ஆன சம்பவம்..

தமிழ் சினிமாவில் எப்போதுமே சென்டிமெண்ட்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனே பராசக்தி படத்தில் சக்சஸ் என்ற வார்த்தையைத் தான் முதன் முதலாகப் பேசி நடித்தார். அதன்பிறகு அவர் தொட்ட உச்சத்தை அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அந்தக் காலம் முதல் இப்போது வரை சென்ட்டிமெண்ட் பார்த்து படங்கள் எடுத்து வழக்கமாகி வருகிறது.

இதே தான் படத்தின் தலைப்புகளுக்கும். படத்தலைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் அது பொதுமக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்து ஹிட் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது.

அதனால் தான் சில படங்களில் தலைப்புகள் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. ஆனால் இப்படி தலைப்பால் நல்ல கதை இருந்தும் ஒருபடம் 5 வருடமாக ரிலீஸ் ஆகாமல் பின் வெளியாகி தோல்வியைத் தழுவியது. அந்தப் படம் தான் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த சதுரங்கம் திரைப்படம். இயக்குநர்கள் பார்த்தீபன், எழில் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் 2003-ல் பார்த்தீபன் கனவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கரு. பழனியப்பன்.

முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். தனது அடுத்த படமான சதுரங்கம் படத்தினை இயக்கியிருக்கிறார். 2006-ல் தயாரான இந்தப் படம் 2011-ல் தான் வெளியானது. ஆனால் இதற்குள் கரு.பழனியப்பன் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை, ஜன்னல் ஓரம் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.

கைகொடுத்த வேஷ்டி விளம்பரம்.. ஆசை நாயகனாக அஜீத் உருவெடுத்ததுது இப்படித்தான்.. வஸந்த் சொன்ன சீக்ரெட்!

ஆனால் சதுரங்கம் படத்தின் தாமதம் ஏனென்றால் அந்தப் படத்தின் தலைப்பே என்று சொல்லப்படுகிறது. இந்தத் தலைப்பு உருவாக்கப்பட்ட விதமானது சதுரங்க விளையாட்டு பலகை போல கருப்பு, வெள்ளையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே 1970களில் சதுரங்கம் என்ற படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் எடுத்து முடித்தபின் ரிலீஸ் ஆக தாமதம் ஆகியிருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் படத்தினை வெளியிட முடியாமல் இருந்துள்ளார். மேலும் அப்போது தலைப்பால் தான் இப்படி படம் முடங்கிக் கிடக்கிறது என்று எண்ணி இயக்குநர் கரு.பழனியப்பனிடம் தலைப்பை மாற்றச் சொல்லிக் கேட்க, திராவிடக் கொள்கை கொண்ட அவரோ சென்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் சதுரங்கம் தலைப்புதான் வைப்பேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

அதன்பின் இந்தப் படம் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 2011-ல் வெளிவந்தது. படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Published by
John

Recent Posts