சூரியவம்சம் ஸ்டைலில் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் இட்லி உப்புமா! வித்தியாசமான முறையில் ட்ரை பண்ணி பாருங்க…

தென்னிந்திய உணவுகளில் முன்னிலையில் இருப்பது இட்லி. இந்த அரிசி உணவான இட்லி எளிதில் செரிமானம் அடைய கூடியது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிட்டு வருவதால் நம் வீடுகளில் அடிக்கடி இட்லி செய்வது வழக்கம். அப்படி நாம் செய்துவரும் இட்லி சில நேரங்களில் மீதம் ஆகிவிடும். அந்த இட்லியை வைத்து சுவையான இட்லி உப்புமா செய்து அசத்தலாம் வாங்க..

செய்ய தேவையான பொருட்கள்

இட்லி – 5

வெங்காயம் – 1

பச்சை மிளகாய்- 2

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 1 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கருவேப்பிலை மற்றும் மல்லி இலை – சிறிதளவு

நெய் – இரண்டு தேக்கரண்டி

கடுகு – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் இட்டிலியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அல்லது கைகளால் உதிர்த்து விட வேண்டும்.

அதன் பின் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும், அதன் பின் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதன் பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு துருவிய தேங்காயை அதில் சேர்க்க வேண்டும். தேங்காயிலிருந்து வாசனை வரும் அளவிற்கு அதை நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் இந்த கலவையில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுப்பை அணைத்து விட வேண்டும், இந்த இட்லி உப்புமாவின் மேல் வாசனைக்காக கொத்தமல்லி தலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.

மோமோஸ் வாங்க நீ கடைக்கு போக வேண்டாம்… வீட்டிலே வெஜிடபிள் மோமோஸ் செய்து சாப்பிடலாம் வாங்க..

ஐந்தே நிமிடத்தில் சுவையான இட்லி உப்புமா தயார். இதில் நாம் தேங்காய் சேர்க்கும் பொழுது சுவை மேலும் கூடுதலாக இருக்கும்.

இந்த இட்லி உப்புமாவை காரமான தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது இட்லி பொடியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...