ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!

ஒவ்வொரு இளைஞனுக்கும் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ வாருங்கள் பார்ப்போம்.

ஜூனியர் ஸ்கேலில் ஐஏஎஸ் அதிகாரியின் ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.56,100 மட்டுமே

சில வருட சேவைக்குப் பிறகு, ஐஏஎஸ் அதிகாரிகள் சீனியர் ஸ்கேலுக்குப் பதவி உயர்வு பெற்றால் அவர்களுடைய அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 67,700 ஆகும்,.

அதேபோல் கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றவுடன், அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 78,800 கிடைக்கும்.

மேலும் அடுத்தகட்டமாக தேர்வு தர அதிகாரிகள் நிலைக்கு வந்தால் அவர்களுடைய அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,18,500 ஆகும்,.

இதனையடுத்து சூப்பர் டைம் ஸ்கேலில் உள்ள அதிகாரிகளின் அடிப்படை ஊதியமாக சுமார் ரூ. மாதம் 1,44,200.

சூப்பர் டைம் ஸ்கேலுக்கு அடுத்தகட்ட அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,82,200.

மேலும் அபெக்ஸ் ஸ்கேல் எனப்படும் ஐ.ஏ.எஸ்., உயர் மட்ட அதிகாரிகளின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 2,25,000.

ஜூனியர் ஸ்கேல் ஐபிஎஸ் அதிகாரியின் ஆரம்ப சம்பளம் ரூ. மாதம் 56,100. ஆனால் சில வருட சேவைக்குப் பிறகு, ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியர் ஸ்கேலுக்கு பதவி உயர்வு பெற்றால் அவர்களின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 67,700.

ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றவுடன், அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 78,800.

தேர்வு தர அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,18,500.

சூப்பர் டைம் ஸ்கேலில் உள்ள அதிகாரிகள் அடிப்படை ஊதியமாக சுமார் ரூ. மாதம் 1,44,200.

சூப்பர் டைம் ஸ்கேலுக்கு அடுத்தகட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,82,200.

காவல்துறை தலைமை இயக்குநர் என்று அழைக்கப்படும் ஐ.பி.எஸ்., உயர் மட்டத்தில் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 2,25,000 ஆகும்.

Published by
Bala S

Recent Posts