அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே…சப்பாத்தியை மிருதுவாக செய்வது இப்படிதானா…?!

நம் உடலுக்கு சத்தான டிபன் என்னவென்றால் அது சப்பாத்தி தான். கோதுமை இந்த உணவில் இருப்பதால் சுகர் இருக்கிறவங்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவு. அது மட்டுமல்லாமல் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் உணவும் இதுதான். சப்பாத்தி கடைகள்ல சூப்பரா ரொம்பவே மிருதுவா இருக்கும். ஆனால் வீட்டில் அப்படி வருவதில்லை. அது எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

சப்பாத்தி செய்வதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னன்னா மாவுக்கு தண்ணீர் எவ்வளவு சேர்க்கணும்கறது தான்.

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – இரண்டரை கப்
உப்பு – சிறிது
பாமாயில் – ஒரு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – ஒண்ணே கால் கப்

எப்படி செய்வது?

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இரண்டரை கப் அளவு கோதுமை மாவு எடுங்க. இப்போ தேவையான அளவு தூள் உப்பை சேர்த்து நல்லா கலந்து விடுங்க. இப்போ ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணையை எடுத்து நல்லா கைகளால் கிளறி விடுங்க.

ஒரு கப் மாவு என்றால் தண்ணீர் அரை கப் எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு கொஞ்சம் வேணும்னா சேருங்க. அதிகமா சேர்த்துடாதீங்க. நல்லா பிசைந்து விடுங்க.

sappathi mavu
sappathi mavu

இப்போ ஒண்ணே கால் கப் தண்ணீர் நமக்கு கரெக்டா இருக்கும். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றியும் பிசையலாம். ஒரு நிமிடம் நல்லா பிசைந்து விடுங்க. பாத்திரத்தில் மாவு ஒட்டாமல் இருந்தால் கைகளிலும் ஒட்டாமல் இருந்தால் கரெக்டான பதம். இப்போது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சப்பாத்தி சாப்டா இருக்கும்.

சப்பாத்தி மாவை நீளமா உருட்டி எடுத்துக்கோங்க. இப்போது தேவையான அளவு சிறிது சிறிதாக கத்தியால் கட் பண்ணி எடுங்க. அப்போ தான் ஒரே அளவா சப்பாத்தி கிடைக்கும்.

இப்போ ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையை எடுத்துத் தேய்க்க ஆரம்பிக்கலாம். கட்டையில் ஒட்டாம இருக்க கொஞ்சமாக மாவு தூவுங்க. நல்லா வட்டமா தேய்த்து எடுத்து தனியாக சேர்த்து வைங்க.

sappathi
sappathi

சப்பாத்தி போடுவதற்கு முன் கல்லை நல்லா சூடு படுத்துங்க. லைட்டா குட்டி குட்டியா பபிள்ஸ் வரும்போது திருப்பி போடுங்க. பொன்னிற கலர் வரும்போது வெந்துவிட்டது என்று அர்த்தம்.

நல்லா வேகவில்லை என்றால் ஒரு துணியை வைத்து கல்லுடன் அழுத்தி ஒத்தி எடுங்க. இப்போ நல்லா வெந்து விடும். அவ்ளோ தான் டேஸ்டான சாப்டான ருசியான சப்பாத்தி உங்களுக்கும் கைவசம் வந்துவிடும். இதற்கு சைடிஷாக சூப்பரான வெஜிடபிள் குருமாவை சேர்த்து பரிமாறுங்க. வீட்டில் எல்லோரிடமும் சபாஷ் வாங்கலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews