கிருஷ்ணஜெயந்திக்கு வெண்ணை முறுக்கு செய்யலாமா?

கிருஷ்ணஜெயந்தி என்றாலே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்து விடும். ஆடல் பாடல், கிருஷ்ணர் பாதம் என கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி மகிழ்வர். முக்கியமா விதவிமாக பலகாரங்கள் செய்து கிருஷ்ணருக்குப் படைப்பார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று தான் இந்த வெண்ணை முறுக்கு. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

Flour Arisi Maavu
Pacharisi Maavu

பச்சரிசி மாவு – ஒரு வட்டவை
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கருப்பு எள் – அரை டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
வெண்ணை – தேவைக்கு

எப்படி செய்வது?

முறுக்கு மாவை நல்லா சலித்துவிட்டு செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு ஒரு கப், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை பொடி, கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி ஆகியவற்றை சல்லடையில் சலித்து, அரை டீஸ்பூன் சீரகமும், எள்ளும் சேருங்க. தேவையான அளவு உப்பு, வெண்ணையும் சேருங்க.

Murukku maavu

இதோடு கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுங்க. எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி நல்லா சூடு பண்ணுங்க. ரொம்ப காய வேண்டாம்.

Butter Murukku
Butter Murukku

பொரியற அளவு காய்ந்தால் போதும். இப்போது முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழிந்து எடுங்க. இது ரொம்ப சிவக்காது. இதேபோல் எல்லா முறுக்கும் போட்டு எடுங்க. அவ்ளோ தான்…! சுவையான பட்டர் முறுக்கு ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews