எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!

கவலை இல்லாத மனிதன் உலகிலே இல்லை. அப்படி இருக்கிறான் என்றால் அது பொய்யாகத் தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. பூட்டு என்றால் சாவி இல்லாமலா இருக்கும். நம் மனமே பல துன்பங்களுக்கும் காரணமாகி விடுகிறது. அதில் இருந்து விடுபட என்ன தான் வழி என்று இப்போது பார்ப்போம்.

‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்?’னு பலரும் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். வாழ்க்கையில் இந்தக் கேள்வியை மனதுக்குள்ளேயே கேட்காதவர்களே இல்லை எனலாம். எனக்கு மட்டும் எனக்கு மட்டும் என்று கேட்கும் கேள்வியில் நியாயமே இல்லை. ஏனென்றால் எல்லாருக்கும் கஷ்டம் உண்டு.

அவரவர்க்கு மட்டும் தான் அது தெரியும். துன்பமும், கவலையும் எதனால் வருகிறது? ஒரு பிரச்சனையால் வருகிறது. பிரச்சனை வந்து விட்டால் அதையே திரும்ப திரும்ப யோசித்து அதைக் கவலையாகவும், துன்பமாகவும் உருவாக்குவது நாம் தான்.

கண்ணதாசன்கூட அருமையாக ஒரு பாடலில் எழுதியிருப்பார். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்று அருமையாக சொல்லியிருப்பார்.

நாம் துன்பப்பட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பிரச்சனை போய்விடாது. அப்படி என்றால் நாம் தான் அதற்குக் காரணமாகிறோம். இதில் கடவுளை சம்பந்தப்படுத்தக்கூடாது.

Kannadasan
Kannadasan

அதே பாடலில் ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்றும் கண்ணதாசன் எழுதியிருப்பார். நமக்கு இருக்குற கஷ்டமும், துன்பமும் தான் ரொம்ப பெரிசு என நாம் எழுதியிருப்போம். ஆனால் நாம் எனக்கு மட்டும் தான் நிறைய கஷ்டம்.

உன்னால தான் எல்லாம் என கடவுளையும் உடன் உள்ளவர்களையும் சாடிப் பேசி துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்து வருகிறோம். நாம் நல்லா இருக்கும் போது கடவுளுக்கு யாருமே நன்றி சொல்வது இல்லை.

ஆனால் ஒரு கஷ்டம் வந்துவிட்டால் தாங்க முடியாத இன்னலுக்கு ஆளாவதும், கடவுளை குறை சொல்வதுமே வாடிக்கையாகி விட்டது. அதனால் நாமும் கொஞ்சம் யோசித்து அதிலிருந்து விடுபட வழி காண வேண்டும். எல்லாவற்றையும் கடக்கக்கூடிய தைரியத்தைப் பெற்றுத்தருவது இறைவனின் நம்பிக்கை தான்.

எப்போதும் குறை சொல்வதை விட்டு விட்டு தெய்கத்தின் அனுக்கிரகம் கட்டாயம் நமக்குக் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இறைவனை மனதார வழிபடுங்கள். இதை எல்லாம் யோசித்து நாம் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...