தொகுப்பாளினி டிடியின் ‘டிடி ஸ்டைலஸ்’… தடைகளைத் தாண்டி சாதித்து வரும் டிடி… நெட்டிசன்கள் பாராட்டு…

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி தொகுப்பாளர்களில் மிக பிரபலமானவர். இவர் பேட்டி எடுக்காத செலிபிரிட்டிஸே இல்லை என சொல்லலாம். தனது பேச்சு திறமையால் மக்களைக் கவர்ந்தவர். ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நினைக்கும் வகையில் முதன் முதலாக மாபெரும் ரசிகர்களைக் கொண்ட தொகுப்பாளினி என்ற பெருமையைப் பெற்றவர் டிடி.

இப்படியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் டிடி ஆட்டோ இம்மியூன் டிஸ்ஆர்டர் மற்றும் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நிற்க முடியாமல் போனது. நிற்க முடியாமல் போனதால் தொகுப்பாளினியாக அவரால் பணியாற்ற முடியவில்லை. அதனால் கடந்த சில ஆண்டுகளாக டிடி டிவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

எனினும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி போஸ்ட்களைப் போடுவார். மக்களிடம் கனெக்ட் ஆகி இருக்கவே விரும்புவார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் கடந்த சில வருடங்களாக வலியை மட்டுமே அனுபவித்து வருகிறேன். என்னால் ஸ்டிக் இல்லாமல் ஐந்து நிமிடத்திற்கு மேல் நிற்க முடியாது. மற்றவர்களைப் போல் என்னால் ஓட முடியாது. ஆனால் நான் இப்படி இருக்க விரும்பவில்லை. மக்களுக்காக என்னால் முடிந்தது எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் டிடி இந்த ஆண்டு அவர் ஆரம்பித்திருக்கும் ஒரு ஐடியா தான் ‘டிடி ஸ்டைலஸ் 2024’. இந்த தலைப்பின் கீழ் அவர் தன்னுடைய மேக்கப் ரோட்டின், ஸ்கின் கேர் ரோட்டின், டிரஸ் கலெக்ஷன், ஜூவல் கலெக்ஷன் ஆகியவற்றை பதிவிடுகிறார். இதன் மூலம் மக்களுக்கு எளிமையாக பட்ஜெட்டில் எப்படி ஸ்டைல் பண்ணலாம் என்ற ஐடியாக்களை கூறி வருகிறார்.

இதைப் பற்றி டிடி தற்போது இன்ஸ்டாவில் போட்டிருந்த போஸ்டில், ஒவ்வொரு நாளும் நமக்கு பாடம் தான், அதைக் கற்று கொள்ளுங்கள். ‘டிடி ஸ்டைலஸ்’ என்பதை எனது ஓய்வு நேரத்தில் செய்ய ஆரம்பித்தேன், ஆனால் மக்களை அதை விரும்பி பார்க்கின்றனர். அதனால் நானும் இதை மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறேன் என்று ‘டிடி ஸ்டைல்ஸ்’ ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசென்கள் நோயினால் பாதிக்கப்பட்டு நிற்க முடியாமல் போனாலும் உட்கார்ந்து கொண்டு மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடங்கிய புது முயற்சிக்காகவும் அவரது தன்னம்பிக்கைக்காகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews