சளி தொல்லையால் உங்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? இந்த பாட்டி வைத்தியங்களை செய்து பாருங்கள்…!

பனிக்காலம் மழைக் காலம் என்று மட்டும் இல்லாமல் கோடை காலத்தில் கூட சளி தொல்லை குழந்தைகளுக்கு எளிதில் ஏற்படுவது வாடிக்கை. வருடம் முழுவதும் சில குழந்தைகள் சளி தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.

சளித்தொல்லை

சளி தொல்லையை போக்க எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் சளி தொல்லை நீங்கிய பாடில்லை என்று கவலைப்படுகிறீர்களா? உடனே இந்த பாட்டி காலத்து வீட்டு வைத்திய முறைகளை செய்து பாருங்கள். குழந்தைகளின் நெஞ்சு சளி காணாமல் போய்விடும்.

1. சளி தொல்லையை நீக்கும் தேங்காய் எண்ணெயும், பச்சை கற்பூரமும்:

images 3 11

தேங்காய் எண்ணெயும் பச்சை கற்பூரமும் குழந்தைகளின் நெஞ்சு சளியை நீக்க ஒரு நல்ல தீர்வு ஆகும்.

நான்கைந்து துண்டுகள் பச்சை கற்பூரத்தை பொடியாக்கி ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் கை பொறுக்கும் சூட்டில் (குழந்தைகளுக்கு அதிகமான சூட்டில் வைத்து விடக்கூடாது) எடுத்து குழந்தைகளின் நெஞ்சு, முதுகு, விலா பகுதிகளில் தடவவும்.

இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் நெஞ்சு சளி கரைந்து வெளியேறும். சளித்தொல்லை அகலும்.

2. சளி தொல்லையை நீக்கும் பூண்டு தண்ணீர்:

garlic 3419544 1280

பூண்டினை பத்துப்பற்கள் எடுத்து இடித்து அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த பூண்டு தண்ணீரை குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 5மிலி வீதம் கொடுத்தால் சளி தொல்லை குறையும்.

இதனை நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

3. சளி தொல்லையை நீக்க கற்பூரவள்ளியும் தேனும்:

images 3 13

ஐந்து கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு சளி தொல்லை அகலும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது.

4. வெற்றிலை மற்றும் விக்ஸ் சளி தொல்லையை விரட்டும்:

images 3 12

வெற்றிலையில் நடுவே பேபி விக்ஸ் வைத்து ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த விக்ஸ் வைத்த வெற்றிலையை தீபத்தில் காட்ட வேண்டும்.

விக்ஸ் உருகி வெற்றிலையில் பரவும் பொழுது சூடு பொறுக்க கையில் எடுத்து குழந்தைக்கு தடவ வேண்டும்.

இந்த வெற்றிலையை அப்படியே குழந்தையின் மார்பு பகுதியில் ஒட்டி விடலாம்.

மேற்கண்ட வீட்டு வைத்தியங்கள் யாவும் குழந்தைகளுக்கு சளி தொல்லையிலிருந்து விடுபட அவசர காலத்தில் காப்பாற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள். இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் குழந்தையின் நெஞ்சு சளியை வெகுவாக குறைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews